வேணும்னா தர்மத்துக்கு வந்து நடிக்கவா? செம்ம கோபத்தில் பந்தய நடிகர்.. பாவம்யா அந்த இயக்குநர்
சென்னை: இந்த நடிகர் தமிழ் சினிமாவில் இருக்கும் டாப் நடிகர்களில் ஒருவர். ஒரு காலத்தில் இவருடன் போட்டி போட்டுக் கொண்டு இருந்த வாரிசு நடிகரோ, அதன் பின்னர் உச்ச நடிகருடன் போட்டி போட ஆரம்பித்து இப்போது பவர் நடிகராகவே மாறிவிட்டார். ஆனால் இந்த நடிகருக்கு அது குறித்தெல்லாம் எந்த கவலையும் இல்லை. தான் நடிக்கும் படத்திற்கு சம்பளத்தை வாங்கினோமா? தனக்கு பிடித்த விஷயங்களைச் செய்தோமா? என இருந்து வந்தார். இது மட்டும் இல்லாமல் தனது படங்கள் ஓடுகிறதா? எந்த அளவுக்கு பிசினஸ் ஆகிறது என எல்லாம் இவர் அக்கறை செலுத்துகிறாரா இல்லையா என பலரும் கேள்வி எழுப்பும் அளவுக்கு நடிகரின் நிலை மொத்தமாக மாறிவிட்டது.
இப்படி இருக்கையில் நடிகர் நடிப்பில் ஒரு படம் வெளியாகி ஒரு ஆண்டுக்கு மேல் ஆகிவிட்டது. அது விஷயம் அல்ல. மாறாக இவர் அதன் பின்னர் எந்த படத்திலும் கமிட் ஆகவில்லை என்பதுதான் தகவலே. அதாவது தனது முந்தைய படத்தின் இயக்குநர் சொன்ன கதையே இவருக்கு மிகவும் பிடித்துப் போக, இயக்குநர் படத்தில் நடிப்பதாக கூறி விட்டார். இயக்குநரும் நிம்மதியில் இருக்க, நடிகர் இயக்குநர் மற்றும் தனது மேனேஜர் என இருவருக்கும் ஒரு டஃப்ஃபான டாஸ்க் ஒன்றைக் கொடுத்துள்ளார்.
அதாவது இருவரும் சென்று தயாரிப்பு நிறுவனங்களிடம் கதையைச் சொல்லுங்க, எனக்கு சம்பளமாக இத்தனை கோடிகள் வேண்டும், படத்தின் மொத்த பட்ஜெட்டை நீங்கள் முடிவு செய்து கொள்ளுங்கள் என்று தெரிவித்துள்ளார். இதனால் நடிகரின் மேனேஜருடன் இணைந்து கொண்டு ஏதோ, அனுபவம் இல்லாத பட்டதாரி வேலைக்கு அலைவது போல எல்லா தயாரிப்பு நிறுவனங்களுக்கும் அலைந்துள்ளார் இயக்குநர்.

சம்பள விவகாரம்: பலரும் சொன்னது, கதை நன்றாக உள்ளது, ஆனால் அந்த கதாநாயகனுக்கு பிசினஸ் இவ்வளவுதான். ஆனால் அவர் எதிர்பார்ப்பது அவருடைய பிசினஸை விட பல மடங்கு. ஆனாலும் அவருக்காக நாங்கள் இத்தனை கோடிகள் கொடுக்கிறோம் என்று கூறி உள்ளனர். இதற்கு ஓகே சொல்லாத நடிகரோ, நீங்க பாம்பே போங்க என்று மும்பைக்கு அனுப்பி உள்ளார். அங்கு கதை கேட்ட தயாரிப்பாளர்கள், இங்குள்ள சில தயாரிப்பாளர்களிடம் விஷயத்தைச் சொல்லி உஷாராகி விட்டார்கள்.
இயக்குநர் வாழ்க்கை: இதனால் அங்கு தமிழ்நாட்டில் சொன்னதைக் காட்டிலும் குறைவாகவே சொல்லி உள்ளார்கள். இதை எல்லாம் கேட்ட நடிகரோ நான் வேண்டுமானால் தர்மத்துக்கு வந்து நடிக்கட்டுமா என்று கேள்வி எழுப்பி உள்ளார். இது மட்டும் இல்லாமல் இந்த நடிகரால் சுமார் ஒரு ஆண்டுக்கும் மேலாக இயக்குநரின் வாழ்க்கை வீணாக போய்விட்டது என்பது குறித்து கொஞ்சம் கூட குற்றவுணர்வு இல்லாமல் இருப்பதுதான் துயரத்திலும் துயரம் என்று பேசி வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications