எதார்த்தமா சொன்னதை இப்படி மாத்திட்டாங்க.. மனசுல வெச்சுக்காதீங்க.. இயக்குநரிடம் சரண்டர் ஆன தமாஸ் நடிகர்?
சென்னை: கோலிவுட்டில் அந்த நடிகரின் வளர்ச்சி அபரிமிதமாக இருக்கிறது. சமீபத்தில் வெளியான அவரது படம் விமர்சன ரீதியாக அடி வாங்கினாலும் வசூலில் சூப்பர் ரெஸ்பான்ஸை பெற்றுவிட்டது. சூழல் இப்படி இருக்க அந்தப் படத்தின் இயக்குநரிடம் நடிகர் சொன்ன ஒரு விஷயம் இணையத்தில் சென்சேஷனல் ஆக; இயக்குநர் அப்செட்டாகிவிட்டாரம். இதை தெரிந்துகொண்ட நடிகர் உடனடியாக அந்த இயக்குநருக்கு ஃபோன் செய்துவிட்டாராம்.
தமிழ் சினிமாவில் இந்த நடிகர் அறிமுகமானபோது சில படங்களிலேயே காணாமல் போய்விடுவார் என்றுதான் பலரும் கணித்தார்கள். ஆனால் இவரோ அதையெல்லாம் காதில் போட்டுக்கொள்ளாமல் தனது திறமையை எப்படி வளர்ப்பது; அதை எப்படி வெளிக்காட்டி பெயரையும் புகழையும் பணத்தையும் சம்பாதிப்பது என்பதில்தான் தெளிவாக இருந்தார். இதன் காரணமாக வரிசையாக இவருக்கு வெற்றி மேல் வெற்றி வந்துகொண்டே இருக்கின்றன.
டாப் ஹீரோக்களில் ஒருவர்: சில படங்களிலேயே காணாமல் போய்விடுவார் என்று கணிக்கப்பட்ட அவர்தான் இப்போது டாப் 5 ஹீரோக்களில் ஒருவராக மாறியிருக்கிறார். அவரை குறைத்து மதிப்பிட்டவர்கள் எல்லாம் என்ன பேசுவது என்று தெரியாமல் வாயை மூடிக்கொண்டிருக்கிறார்கள். வரிசையாக அவர் நடித்த படங்கள் நூறு கோடி ரூபாயை வசூலித்து நடிகரின் சம்பளத்தையும் தாறுமாறாக உயர்த்திவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய படம்: கடைசியாக அவர் நடித்த ஒரு படமும் விமர்சன ரீதியாக அடி வாங்கினாலும்; வசூலில் சக்கைப்போடு போட்டது. எனவே நடிகர் ரொம்பவே மகிழ்ச்சியாக இருக்கிறார். இந்தப் படம் செய்திருக்கும் வசூலை வைத்து அடுத்த படத்துக்கு மேற்கொண்டு சம்பளத்தை உயர்த்தலாம் என்று கணக்கு போட்டிருக்கிறாராம். சம்பள விஷயத்தில் நடிகர் படு விவரமாக காய்களை நகர்த்தி வருவதை பார்த்து பலரும் ஆச்சரியப்படுகிறார்கள்.
இயக்குநருக்கு மூக்குடைப்பு: இது ஒருபக்கம் இருக்க சமீபத்தில் அவர் நடித்த படத்தை இயக்கிய இயக்குநருடன் நடிகர் செய்த உரையாடல் இணையத்தில் சென்சேஷனல் ஆனது. தன்னை மட்டம் தட்ட பார்த்தவருக்கு நடிகர் தரமான பதிலடியை கொடுத்துவிட்டார் என்றெல்லாம் பேசினார்கள். அந்த வீடியோ ட்ரெண்டானதில் இயக்குநருக்கு பெரிய அவமானம் ஆகிவிட்டதாம். இவரை வைத்து இனிமேல் படமே எடுக்கக்கூடாது என்று முடிவெடுக்கும் நிலைமைக்கு அவர் சென்றுவிட்டதாகவும் கோலிவுட் பட்சிகள் கூறுகின்றன.
சரணடைந்த நடிகர்: இந்த வீடியோ விவகாரத்தில் இயக்குநர் அப்செட்டாகியிருப்பது நடிகரின் காதுகளுக்கும் சென்றிருக்கிறது. அய்யோ அவர் பெரிய இயக்குநர் எதற்காக அவரது வருத்தத்தை சம்பாதிக்க வேண்டும் என நினைத்த நடிகர்; உடனடியாக இயக்குநருக்கு ஃபோன் செய்து நான் எதார்த்தமாகத்தான் அப்படி பேசினேன். அதை இப்படி மாற்றிவிட்டார்கள். நீங்கள் எதுவும் மனதில் வைத்துக்கொள்ள வேண்டாம் என கூற; இயக்குநருக்கு ரொம்பவே மகிழ்ச்சியாம். ச்ச மனிதர் இவ்வளவு நல்லவராக இருக்கிறாரே என்று தனக்கு நெருக்கமானவர்களிடம் சொல்லிவருகிறாராம். நடிகர் செம விவரம்தான்.


Click it and Unblock the Notifications











