பேசாம அந்த நடிகரையே கல்யாணம் பண்ணிருக்கலாம்.. புலம்பும் நடிகரின் முன்னாள் மனைவி?.. இது என்னங்க புதுசா இருக்கு
சென்னை: தமிழ் சினிமாவின் டாப் நடிகர்களில் ஒருவர் அவர். அவருடைய மகள் திருமணம் செய்து அந்த வாழ்க்கையில் பிரச்னைகளை சந்தித்திருக்கிறார். கணவரை பிரிந்துவிட்ட அவர்; இப்போது சிங்கிளாகத்தான் இருக்கிறார். எப்படியாவது மகளுக்கு இரண்டாவது திருமணம் செய்துவைத்துவிடலாம் என நடிகர் எடுத்த அத்தனை முயற்சிகளும் வீணாய்த்தான் போகின்றனவாம். இந்நிலையில் நடிகரின் முன்னாள் மனைவி பற்றி புதிய கிசுகிசு ஒன்று கிளம்பியிருக்கிறது.
இந்திய அளவில் புகழடைந்த நடிகர்களில் ஒருவர் அவர். பல வருடங்களாக நடித்துவரும் அவர்; இன்னமும் சுறுசுறுப்பாக ஓடுவதை பார்த்து அனைவருமே ஆச்சரியத்தில் வாயடைத்து போயிருக்கிறார்கள். அந்த நடிகருக்கு பெண் வாரிசுதான் இருக்கிறது. தனது மகள் மீது எக்கச்சக்க பாசத்தை வைத்திருக்கிறார் நடிகர். அதன் காரணமாக மகள் என்ன சொன்னாலும் கேட்கும் பழக்கத்தை ஆரம்பத்திலிருந்தே கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
காதலுக்கு ஓகே சொன்ன நடிகர்: மகள் ஒரு நடிகரை தீவிரமாக காதலித்தார். காதலை தனது தாய் மற்றும் தந்தையிடம் சொன்னபோது முதலில்; தந்தையான நடிகர் ஒத்துக்கொள்ளவே இல்லை. நம் ஸ்டேட்டஸ் என்ன அவங்க ஸ்டேட்டஸ் என்ன என்றெல்லாம் கேள்வி கேட்டு; மகளின் மனதை மாற்றுவதற்கு முயற்சி செய்தார். ஆனால் மகளோ தான் கொண்ட முடிவில் உறுதியாக இருந்தார். மகளின் உறுதியை பார்த்த நடிகரும்; அவர் காதலித்தவரையே திருமணமும் செய்து வைத்துவிட்டார்.

உருவான பிரச்னை: அவர்களது திருமணம் நடந்தபோது அவர்களை வாழ்த்தியவர்களைவிட; பார்த்து பொறாமைப்பட்டவர்கள்தான் அதிகம். ஏனெனில் உச்ச நடிகரின் வீட்டு மருமகனான போது அந்த நடிகரின் மார்க்கெட் பெரிய அளவில் இல்லை. திருமணத்துக்கு பிறகு இரண்டு பேரும் சுமூகமாகத்தான் வாழ்ந்துவந்தார்கள். ஆனால் என்ன நடந்ததோ தெரியவில்லை; அவர்களுக்குள் ஏற்பட்ட மனஸ்தாபம் பெரிய அளவு ஆகி இப்போது பிரிந்தும் விட்டார்கள்.
ஏற்கனவே ஒரு காதல்: இதற்கிடையே ஒல்லி நடிகரை காதலிக்கும் முன்பே இன்னொரு வாரிசு நடிகரை உச்ச நடிகரின் மகள் காதலித்ததாக கிசுகிசுக்கள் கிளம்பியது நினைவுகூரத்தக்கது. அந்த வாரிசு நடிகர் விளையாட்டுத்தனமாக இருந்ததாலும்; ஏகப்பட்ட பிரச்னைகளை கொடுத்ததாலும்தான் அந்தக் காதலை பிரேக்கப் செய்துவிட்டதாக கூறப்பட்டது. இந்நிலையில் கோலிவுட்டில் மீண்டும் புதிய கிசுகிசு ஒன்று கிளம்பியிருக்கிறது.
என்ன கிசுகிசு?: அதாவது, ஒல்லி நடிகரை காதலித்து திருமணம் செய்து விவாகரத்து பெற்ற மகளோ; பேசாமல் அந்த வாரிசு நடிகரையே திருமணம் செய்திருக்கலாம். அவர் சில பிரச்னைகளை கொடுத்தாலும்; தனக்கு துரோகம் செய்திருக்கமாட்டார். இந்த நடிகர்தான் தன்னையும் திருமணம் செய்துவிட்டு; இன்னும் சில பெண்களுடன் கூத்து அடித்தார். ஆனால் அவர் அப்படியெல்லாம் இல்லை. உள்ளே ஒன்று வைத்து வெளியே ஒன்று பேசாதவர். அவருடனான காதலை பிரேக்கப் செய்ததற்கு தண்டனையாகத்தான் இந்த திருமண உறவு முறிந்துவிட்டது என்று புலம்பி தள்ளுகிறாராம். இதை கேள்விப்பட்ட தந்தையான உச்ச நடிகர்; விரைவில் இன்னொரு திருமணம் செய்துகொள் என மீண்டும் கோரிக்கை வைத்தாராம். ஆனால் மகளோ திட்டவட்டமாக மறுத்துவிட்டாராம்.


Click it and Unblock the Notifications











