அரசியல் புள்ளியை கையில் போட்டுக் கொண்ட நடிகை.. வீக் எண்ட் வந்தாலே பீச் ஹவுஸில் சீக்ரெட் மீட்டிங்காம்!
சென்னை: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகை ஒருவர், கடந்த சில மாதங்களாக அரசியல் வட்டாரத்தில் செல்வாக்கு மிக்க நபருடன் மிகவும் நெருக்கமாக பழகி வருவதாக கோலிவுட் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. சினிமா வாய்ப்புகளைத் தாண்டி, தனது எதிர்கால திட்டங்களுக்காகவே இந்த நட்பு உருவாகியிருப்பதாகவும் கூறப்படுகிறது.
அந்த நடிகையும், அந்த அரசியல் பிரபலமும் அடிக்கடி தனிப்பட்ட முறையில் சந்தித்து நீண்ட நேரம் பேசி வருவதாக தகவல்கள் கசிந்துள்ளன. குறிப்பாக வார இறுதி நாட்களில் நகரின் புறநகர்ப் பகுதியில் உள்ள ஒரு பீச் ஹவுஸில் இருவரும் சந்திப்பதை வழக்கமாக வைத்திருப்பதாகவும் கோலிவுட் வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகிறது.
எதற்காக இந்த சந்திப்பு?: சினிமா, தொழில், அரசியல் என பல்வேறு விஷயங்கள் குறித்து இந்த சந்திப்புகளில் ஆலோசனை நடைபெறுவதாக ஒரு தரப்பு கூறுகிறது. அதே நேரத்தில், இந்த நெருக்கம் வெறும் நட்பை தாண்டியதா என்ற கேள்வியையும் சமூக வலைதளங்களில் சிலர் எழுப்பி வருகின்றனர். இருப்பினும், இதுகுறித்து சம்பந்தப்பட்ட தரப்பில் இருந்து எந்தவித அதிகாரப்பூர்வ விளக்கமும் வெளியாகவில்லை.
வார இறுதிதான் முக்கியம்: குறிப்பாக ஒவ்வொரு வார இறுதியிலும் நடிகையின் கார் அந்த பீச் ஹவுஸை நோக்கி செல்வதாகவும், அங்கு பல மணி நேரம் தங்கி விட்டு திரும்புவதாகவும் சினிமா வட்டாரங்களில் பேச்சு எழுந்துள்ளது. இந்த தகவல் தற்போது கோலிவுட்டில் பரபரப்பான விவாதமாக மாறியுள்ளது.

உண்மை என்ன?: இதுவரை வெளியாகியுள்ள தகவல்கள் அனைத்தும் திரையுலக வட்டாரங்களில் பரவி வரும் பேச்சுகளே தவிர, அவற்றை உறுதிப்படுத்தும் ஆதாரங்கள் எதுவும் வெளியாகவில்லை. அதனால், இந்த விவகாரம் குறித்து சம்பந்தப்பட்டவர்கள் விளக்கம் அளிக்கும் வரை இதை உறுதியான தகவலாக எடுத்துக்கொள்ள முடியாது. இருப்பினும், இந்த கிசுகிசு தற்போது கோலிவுட்டில் பரபரப்பை கிளப்பியிருப்பது மட்டும் மறுக்க முடியாத உண்மையாக உள்ளது.


Click it and Unblock the Notifications