இயக்குநருக்கு விவாகரத்து?.. தூது சென்ற தம்பி?.. மனதை மாற்றிக்கொண்ட மனைவி.. அனைத்தும் சுபமாம்

By Staff

சென்னை: கோலிவுட்டின் முக்கியமான இயக்குநர்களில் ஒருவர் என்று பெயர் எடுத்தவர் அவர். ரொம்பவே கஷ்டப்பட்டு இந்த இடத்துக்கு வந்திருக்கும் அவர்தான்; இந்திய சினிமாவில் சிறந்த நடிகர் என்று பெயர் எடுத்த ஒருவரை இஞ்ச் இஞ்ச்சாக செதுக்கியவர். அப்படிப்பட்ட அவருக்கு பெர்சனல் வாழ்க்கையில் இப்போது வந்த பிரச்னையை; அவருடைய தம்பி தூது சென்று தீர்த்துவிட்டதாக கோலிவுட்டிலிருந்து குரல்கள் கேட்கின்றன.

தமிழ் சினிமாவின் லெஜண்ட் இயக்குநர்களில் ஒருவர் என்று ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் அவர். இதுவரை அவர் இயக்கிய படங்கள் ரசிகர்களின் ஆல்டைம் ஃபேவரைட் லிஸ்ட்டில் இருக்கின்றன. தோன்றும்போதெல்லாம் அந்தப் படங்களை போட்டு பார்க்கும் அளவுக்கு சலிக்காமல் உருவாக்கி வைத்திருக்கிறார். அவர்தான் இப்போது இந்திய அளவில் சூப்பர் நடிகர் என்று அவரது சகோதரர் பெயர் எடுக்க முழு காரணமாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இயக்கத்திலிருந்து பிரேக்: ஃபுல் ஃபார்மில் சென்றுகொண்டிருந்த அந்த இயக்குநருக்கு இடையில் ஏதோ சிக்கல்கள் எழ; இயக்கத்திலிருந்து பிரேக் எடுத்து நடிக்க ஆரம்பித்துவிட்டார்.எ ப்படி இயக்கத்தில் கெத்து காண்பித்தாரோ அதேபோல் நடிப்பிலும் தனது தடத்தை ஆழமாக பதித்தார். இருந்தாலும் இவர் மீண்டும் இயக்க வர வேண்டுமென்பதுதான் ரசிகர்களின் ஆசையாக இருக்கிறது. அவர்களின் ஆசைப்படி இப்போது அவர் இயக்குநர் அவதாரத்தையும் எடுத்துவிட்டார்.

Top Tamil Director s Divorce Rumours Settled After Brother s Intervention Say Industry Sources

பெர்சனல் வாழ்க்கை: அவரது பெர்சனல் வாழ்க்கையை பொறுத்தவரை சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லை. முதலில் ஒரு நடிகையை காதலித்து திருமணம் செய்துகொண்டார். ஆனால் அவரை விவாகரத்து செய்தார். அதன் பிறகு தன் இயக்கத்தில் நடித்த நான்கெழுத்து நடிகையுடன் நெருக்கமாக இருந்தார் என்று கிசுகிசுக்கப்பட்டது. ஆனால் அதில் எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. தொடர்ந்து இன்னொரு பெண்ணை திருமணம் செய்து செட்டிலாகிவிட்டார்.

கிளம்பிய பூகம்பம்: திருமணத்துக்கு பிறகு வாழ்க்கையை ஸ்மூத்தாக ஓட்டிக்கொண்டிருந்த நிலையில் கடந்த சில நாட்களாக புதிய பூகம்பம் ஒன்று கிளம்பியது. அதாவது இயக்குநரை அவரது மனைவி பிரியப்போகிறார்; விரைவில் விவாகரத்து குறித்த அறிவிப்பு வரும் என்று பேச்சுக்கள் ஓட ஆரம்பித்தன. ஆனால் சம்பந்தப்பட்ட இரண்டு பேரும் இதுகுறித்து எந்த ரியாக்ட்டும் செய்யாமல் சைலெண்ட் மோடில் இருக்கிறார்கள்.

தூது சென்ற தம்பி? தீர்ந்த பிரச்னை?: இந்நிலையில் புதிய கிசுகிசு ஒன்று கிளம்பியிருக்கிறது. அதாவது இந்த பேச்சுக்கள் மீடியாவில் வந்ததை பார்த்த இயக்குநரின் தம்பி உடனடியாக தனது அண்ணனிடமும், அண்ணியிடமும் தொலைபேசி வாயிலாக பேசினாராம். முதலில் முரண்டு பிடித்த இரண்டு பேரும்; இவரின் விடாப்படியான பேச்சையும், சமாதானத்தையும் கேட்டு தங்கள் முடிவிலிருந்து பின்வாங்கிவிட்டார்களாம். இதனால் அவரது குடும்பத்தினர் ரொம்பவே நிம்மதியாக இருக்கிறார்களாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X