அவரால் டிஆர்பி காலி.. பாடகரை கதறவிட்ட டாப் சேனல்.. சம்பள விஷயத்தில் மீடியாவின் உள்ளடி வேலை!
சென்னை: சினிமா உலகத்துல லைம் லைட்ல இருக்குற வரைக்கும் தான் பவுசு, கொஞ்சம் கேப் விழுந்தா திரைக்குப் பின்னாடி இருக்குறவங்களோட ஆட்டம் வேற லெவல்ல இருக்கும்பாங்க. அது இப்போ ஒரு பன்முகத்தன்மை கொண்ட சீனியர் பாடகருக்கும், டாப் ரியாலிட்டி ஷோ சேனல் ஒண்ணுக்கும் நடுவுல நடக்குற 'சம்பள பஞ்சாயத்து' மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
ஆல்-டைம் ஃபேவரிட் பாடகர்: 90s மற்றும் 20s கிட்ஸ்களின் ஆல்-டைம் பிளேலிஸ்ட்டில் இருக்கும் பல சூப்பர் ஹிட் பாடல்களை அவர் பாடி இருக்கிறார். அதோடு தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் அனைத்து முன்னணி இசையமைப்பாளர்களில் இசையிலும் பாடி இருக்கிறார். கிட்டத்தட்ட 500-க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியதோடு, ஒரு படத்தில் நடித்து நடிகராகவும் களமிறங்கினார்.

கேவலப்படுத்துறாங்க: இப்படிப்பட்ட சீனியர் இசைக் கலைஞரைத் தான், ஒரு முன்னணி தனியார் தொலைக்காட்சி கொஞ்சம்கூட மதிக்காமல் அசிங்கப்படுத்தியிருக்கிறது. அந்தச் தனியார் சேனலில் ஒளிபரப்பான ஒரு பிரம்மாண்ட இசை நிகழ்ச்சியில் பங்கேற்க, இவரை கெஞ்சிக் கூத்தாடி அழைத்திருக்கிறார்கள். அவரும் நம்பிப் போய் அந்த நிகழ்ச்சிக்காக தனது உழைப்பை கொடுத்து இருக்கிறார். ஆனால், அந்த நிகழ்ச்சி டிவியில் ஒளிபரப்பாகி கிட்டத்தட்ட 7 மாதங்களுக்கு மேல் ஆகியும், இதுவரை அவருக்கான சம்பளத்தை அந்தச் சேனல் நிர்வாகம் செட்டில் செய்யவில்லையாம். என் காசைத் தாங்க என்று அவர் பலமுறை நாசூக்காகக் கேட்டும் சேனல் நிர்வாகம் இழுத்தடித்தடித்துள்ளது.
சம்பள பாக்கி: கடைசியில் சம்பளத்தை எப்போ கொடுப்பீங்க என நேரடியாகவே கேட்டுவிட, சேனல் நிர்வாகம் அவரை மிகவும் தரக்குறைவாகவும், கேவலமாகவும் பேசி அவமானப்படுத்தியிருக்கிறது. இதனால் மனமுடைந்த அந்தப் பாடகர், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிகுந்த ஆத்தாரத்தோடு இந்த அவமானத்தைப் பதிவிட்டு பின் அதை டெலிட் செய்துவிட்டார். சேனல் நிர்வாகம் ஏன் இப்படி ஒரு சீனியர் பாடகரை அசிங்கப்படுத்த வேண்டும் என்று சேனல் வட்டாரத்தில் விசாரித்தால், அதன் பின்னணியில் இருக்கும் 'பகீர்' ரகசியம் தெரியவந்துள்ளது.
மீடியா செய்த உள்ளடி வேலை: உண்மையில அந்தச் சேனல் மேலிடத்துக்கு இந்த இசையமைப்பாளரை சுத்தமாகப் பிடிக்கவே இல்லையாம். அவர் அந்த இசை நிகழ்ச்சிக்கு வந்ததால்தான், ஒட்டுமொத்த நிகழ்ச்சியின் டிஆர்பி ரேட்டிங்கும் அடியோடு சரிந்துவிட்டதாகவும், நிகழ்ச்சி விளங்காமல் போனதற்கு அவர்தான் காரணம் என்றும் சேனல் தரப்பு கணக்கு போட்டுள்ளது. எப்படியாவது அவரை அந்த நிகழ்ச்சியிலிருந்து விரட்ட வேண்டும் என்பதற்காகவே, வேண்டுமென்றே சம்பளத்தை கொடுக்காமல் இழுத்தடித்து மன உளைச்சலை ஏற்படுத்தி அசிங்கப்படுத்தி இருக்கிறது. ஒரு திறமையான பாடகருக்குத் தொலைக்காட்சி நிறுவனம் செய்துள்ள இந்த உள்ளடி வேலை, இப்போது மீடியா வட்டாரத்தில் ஹாட் டாபிக்காக மாறியுள்ளது.


Click it and Unblock the Notifications