»   »  30 லட்சம் கொடுங்க...வளரும் நடிகையின் கோரிக்கையால் ஆடிப்போன 'சாண்டல்வுட்'

30 லட்சம் கொடுங்க...வளரும் நடிகையின் கோரிக்கையால் ஆடிப்போன 'சாண்டல்வுட்'

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: வளரும் தீப நடிகையின் கோரிக்கையால் காமெடியனிலிருந்து ஹீரோவாக மாறிய சாண்டல்வுட் நடிகர் ஆடிப் போயிருக்கிறாராம்.

தமிழ் சினிமாவில் காமெடியனாக அறிமுகமாகிய சாண்டல்வுட் நடிகர் மிகவும் குறுகிய காலத்திலேயே தமிழ் சினிமாவின் நம்பர் ஒன் காமெடியனாக மாறினார்.

Torch Actress ask Huge Amount Salary

தொடர்ந்து பல படங்களில் ஹீரோவைவிட இவரின் காட்சிகளையே தமிழர்கள் அதிகம் பார்க்கும்படி நேரிட்டது. "எத்தனை நாளைக்குத் தான் ஊரான் காதலை ஊட்டி வளர்ப்பது நாமும் ஊட்டி போய் டூயட் பாடினால் என்ன"

என்ற சிந்தனை திடீரென்று இவருக்கு வந்ததில் ஒரு சுபயோக சுப தினத்தில் இனிமேல் நடித்தால் ஹீரோவாகத் தான் நடிப்பேன் என்று அறிக்கை விட்டு சக ஹீரோக்களுக்கு ஷாக் கொடுத்தார்.

மேலும் இவர் ஹீரோவாக நடித்த படங்களும் முதலுக்கு மோசமில்லாமல் ஓட தற்போது முழுநேர நடிகராகவே மாறிவிட்டார்.

இந்நிலையில் இவரின் அடுத்த படத்திற்கு ஹீரோயினாக நடிக்க முன்னணி நடிகைகளை அணுகியபோது பலரும் தயக்கம் காண்பித்தனராம்.

வேறு வழியில்லாமல் வளர்ந்து வரும் தீப நடிகையை அணுகியபோது நடிக்க சம்மதம் தான் ஆனால் 30 லட்சம் கொடுத்தால் நடிக்கிறேன் என்று நிபந்தனை விதித்திருக்கிறாராம்.

ஆடிப் போன சாண்டல்வுட் தற்போது சம்பளத்தை குறைப்பது தொடர்பாக அவருடன் பேச்சு வார்த்தை நடத்தி கொண்டிருப்பதாக கூறுகின்றனர்.

English summary
The Sandal Wood Comedian Next Movie Torch Actress Agreed to Act as Heroine. But The Actress ask a Huge Amount for Salary.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil