வாரிசு நடிகைக்கு டஃப் கொடுக்கும் நடிகர்
சென்னை: பிரபல நடிகர் ஒருவர் வாரிசு நடிகைக்கு போட்டியாக உள்ளார்.
திறமை கொட்டிக் கிடக்கும் வாரிசு நடிகை சமூக வலைதளங்களில் பிரபலங்களை புகழ்ந்து தள்ளுவதை ஒரு வழக்கமாக வைத்துள்ளார். அவர் புகழ்வதை பார்த்தால் அடடா, அம்மணி எப்படி மனதார பாராட்டுகிறார் என்று ரசிகர்கள் சிலிர்ப்பார்கள்.

பட வாய்ப்பை பெறவே நடிகை இப்படி பாராட்டி ஐஸ் வைப்பதாகவும் விமர்சிக்கப்படுகிறது. இந்நிலையில் அவருக்கு போட்டியாக நடிகர் ஒருவர் கிளம்பியுள்ளார். ஆனால் ஐஸ் வைப்பதில் அவர் நடிகையே மிஞ்சிவிடுவார் போன்று.
சில நேரம் அவர் பிரபலங்களை புகழ்வதை பார்த்தால் ரசிகர்களே எரிச்சல் அடைகிறார்கள். நடிகருக்கு தனது திறமை மீதிருந்த நம்பிக்கை போய்விட்டதா, அதனால் தான் இப்படி காக்கா பிடித்து வாய்ப்பு தேடப் பார்க்கிறாரா என்று சமூக வலைதளங்களில் விமர்சிக்கப்படுகிறது.
அவர் தான் செய்யும் நல்ல காரியங்களை சமூக வலைதளங்களில் மறக்காமல் பதிவிடுகிறார். செய்வதை சொல்லிக் காட்டி பட வாய்ப்பு தேடுகிறார் என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.
முதலில் நடிகையை விமர்சித்தவர்கள் நடிகர் ஐஸ் வைப்பதை பார்த்து இவருக்கு அந்தம்மா எவ்வளவோ பரவாயில்லை என்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











