சீனை மாத்துங்க... இயக்குனர்களுக்கு டார்ச்சர் தரும் நடிகை!

தனது கேரக்டருக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் சீனை மாற்ற சொல்லி டார்ச்சர் தருகிறாராம் வாரிசு நடிகை.

Recommended Video

பூரிப்பில் இருக்கும் வாரிசு நடிகை கொடுக்கும் டார்ச்சர்- வீடியோ

சென்னை: தனது முந்தைய படம் ஹிட் அடித்ததால் பூரிப்பில் இருக்கும் வாரிசு நடிகை, தற்போது நடித்து வரும் படங்களிலும் தனது கேரக்டருக்கு முக்கியத்துவம் இருக்க வேண்டும் என காட்சிகளை மாற்றக் கூறி இயக்குனர்களுக்கு டார்ச்சர் கொடுத்து வருகிறாராம்.

இவருக்கெல்லாம் நடிப்பே வராது, சிரிப்பை வைத்து மட்டும் சீன் போடுகிறார் என தனது முந்தைய படங்கள் பேர் வாங்கியவர் இந்த வாரிசு நடிகை. முன்னணி நடிகர்கள் மற்றும் இயக்குனர்களின் படங்களில் தொடர்ந்து நடித்தபோதும் நடிகையின் நடிப்பு அவ்வளவாக பேசப்படவில்லை.

Train actress irritates directors

இந்நிலையில் சமீபத்தில் இவர் நடித்த திலகம் படம் பெரும் வெற்றி பெற்றது. படத்தில் இவரது நடிப்பும் பெரிதும் பேசப்பட்டது. தனக்கு நடிக்க தெரியாது என்று தூற்றியவர்களின் முகத்தில் கரியை பூசி பழம்பெரும் நடிகையாகவே வாழ்ந்து காட்டியிருந்தார் வாரிசு. மாநிலங்கள் தாண்டியும், பாராட்டு மழையில் நனைந்தார்.

இதனால் இனி வரும் தனது படங்களிலும் நடிப்புக்கு முக்கியத்துவம் கதாபாத்திரங்களில் மட்டுமே நடிப்பது என அவர் முடிவு செய்துள்ளாராம். இதன் காரணமாக இரண்டாவது முறையாக தளபதி நடிகருடன் ஜோடி சேர்ந்துள்ள நடிகை, தனது காட்சிகளை மாற்றும்படி இயக்குனரை நிர்பந்தித்து வருகிறாராம்.

நடிகையின் இந்த நடவடிக்கையால் செம டென்சனில் இருக்கிறாராம் இயக்குனர். இதே நிலைதான் நடிகையின் மற்ற பட இயக்குனர்களுக்கு இருக்கிறதாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X