»   »  திரிஷா-லிங்கு-மம்தா கொண்டாட்டம்!

திரிஷா-லிங்கு-மம்தா கொண்டாட்டம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சண்டக்கோழி படத்தின் 200வது நாள் வெற்றி விழாவையொட்டி விஷால் அண்ட் கோ கொடுத்த பார்ட்டியில்போதை உச்சத்திற்கு ஏற இயக்குநர் லிங்குச்சாமி, நடிகைகள் திரிஷா, மம்தா மோகன்தாஸ் ஆகியோர் பாருக்குள்கெட்ட ஆட்டம் போட்டு கூடியிருந்தவர்களை இன்ப அதிர்ச்சிக்கு ஆளாக்கி விட்டார்களாம்.

விஷால், மீரா ஜாஸ்மின் நடிப்பில் உருவான ஆக்ஷன் படம் சண்டக்கோழி. விஷாலின் குடும்பப் படம் இது.அதாவது அவரது அப்பாதான் படத்தின் தயாரிப்பாளர்.

இப்படத்தின் 210வது நாள் வெற்றி விழாவை சமீபத்தில் கிண்டியில் உள்ள லீ ராயல் மெரீடியன் ஹோட்டலில்பார்ட்டியுடன் அசத்தலாக கொண்டாடினர். விழாவுக்கு வந்தவர்களுக்கு அமர்க்களமான சைவம் பிளஸ் அசைவவகை சாப்பாட்டுக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.

சாப்பாட்டுப் பக்கம் பார்வையாளர்கள் அலை மோத, விஷால், அவரது அண்ணன் விக்ரம் கிருஷ்ணா உள்ளிட்டதிரையுலகப் பிரபலங்கள் நைசாஸ பார் பக்கம் நடையைக் கட்டினர்.

இந்த கோஷ்டியில் திரிஷா, சிவப்பதிகாரம் படத்தில் விஷாலின் நாயகியான மம்தா மோகன்தாஸ், ரீமா சென்உள்ளிட்டோர்தான் முக்கிய பார்ட்டிகள். பாருக்குள் புகுந்த அவர்கள் டிஸ்கோ ஆட்டம், பாட்டம், மது ஆட்டம்என விடிய விடிய அமர்க்களப்படுத்தியுள்ளனர்.

இதில் கிளைமாக்ஸ் என்னவென்றால், இயக்குநர் லிங்குச்சாமி போட்ட கெட்ட ஆட்டம்தானாம். சண்டக்கோழிபடத்தை இயக்கியவர் லிங்குதான். இப்போது திரிஷாவையும், விக்ரமையும் வைத்து பீமா படத்தை இயக்கிவருகிறார்.

ஒரு பக்கமாக ஆடிக் கொண்டிருந்த திரிஷா, மம்தா இடையே புகுந்த லிங்கு, ஷேல் வி டான்ஸ் டுகெதர்? என்றுகொக்கியைப் போட்டு சேர்த்துக் கொண்டு செம ஆட்டம் போட்டாராம்.

லிங்கு ஆடிய வேகத்தைப் பார்த்து திரிஷாவுக்கும், மம்தாவுக்கும் கெளரவப் பிரச்சினை ஆகி விட்டதாம்.லிங்குவே இந்தப் போடு போடும் போது நாங்க என்ன இளப்பமா என்று இரு நாயகிகளும் வரிந்து கட்டிக்கொண்டு லிங்குவைத் தூக்கிச் சாப்பிடும் அளவுக்கு கெட்ட ஆட்டம் போட்டு ஜமாய்த்து விட்டார்களாம்.

மூன்று பேரும் போட்ட ஆட்டம் பாரில் இருந்தவர்களை பரவசத்தில் ஆழ்த்தி விட்டதாம். அத்தனை பேரும்தங்களது ஆட்டத்தை நிறுத்தி விட்டு 3 பேரையும் சூழ்ந்து நின்று கையைத் தட்டியும், காலை ஆட்டியும், தலையைஓட்டியும் திரிஷா, மம்தா, லிங்குவின் மங்காத்தாவை கண்டு புளகாங்கிதம் அடைந்தனராம்.

சண்டக்கோழி படத்தின் வெற்றியை கொண்டாட விடிய விடிய நடந்த இந்த ஆட்டம் விடிகாலையில்,வெள்ளக்கோழி கூவியபோதுதான் முடிவுக்கு வந்ததாம்.

ஆட்ரா ராமா, ஆட்ரா ராமா!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil