»   »  விஷாலுக்கு வலை வீசும் திரிஷா!

விஷாலுக்கு வலை வீசும் திரிஷா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

திரிஷா, விஷால் நட்புதான் இன்றைய கோலிவுட்டின் சூடான பேச்சு.

திரிஷா இதுவரை பெரிய அளவுக்கு வதந்திகளில் சிக்கியதில்லை. அங்கே ஆடினார், இங்கே அடித்தார் என்ற அளவுக்குத்தான் இதுவரை அவரைப் பற்றியசெய்திகள் வந்துள்ளன. மற்றபடி அவருடன் சுற்றினார், இவருடன் இப்படி இருந்தார் என்று செய்திகள் வந்ததில்லை.

கொஞ்ச காலத்திற்கு முன்பு வந்த பாத்ரூம் குளியல் வீடியோதான் திரிஷாவின் கலையுலக வாழ்க்கையில் மிகப் பெரிய பரபரப்புச் செய்தி. அதுவும் கூட கிராபிக்ஸ்என்று சொல்லிவிட்டார்கள்.

இப்போது திரிஷாவைப் பற்றிய ஒரு சூடான கிசுகிசு கோலிவுட்டில் வேகம் வேகமாக கிளம்பியுள்ளது. அவருடன் சேர்த்து விஷால் கிசுகிசுக்கப்படுகிறார்.

இருவரும் நீண்ட காலமாகவே நண்பர்கள்தான் என்றாலும் இதுவரை இணைத்து செய்திகள் வந்ததில்லை. ஆனால் இப்போது வர ஆரம்பித்திருக்கிறது. இதற்குமுக்கிய ஆதாரமாக வதந்தியாளர்கள் சொல்வது, இருவரும் சமீப காலமாகநுங்கம்பாக்கத்தில் உள்ள காபி ஷாப்பில் அடிக்கடி சந்தித்துப் பேசுகிறார்களாம்.

பேச்சு என்றால் சும்மா பேச்சு இல்லையாம். ரொம்ப நேரமாக ஒரே கப்பை கையில் வைத்துக் கொண்டு மொள்ளமாக குடித்தபடி வெள்ளமெனப் பேசிக்கொண்டிருக்கிறார்களாம்.

இருவருக்கும் இடையே நெருக்கம் அதிகமாகி வருவதையே இது காட்டுவதாக வதந்தியாளர்கள் ஆணித்தரமாக சொல்லி வருகிறார்கள். இவர்களது நெருக்கத்தால்நாகர்ஜூனாவின் கடுப்பை சம்பாதித்துள்ளாராம் திரிஷா.

லாரன்ஸ் ராகவேந்திரா அடுத்து தெலுங்கில் இயக்கும் படம் டான். இதில் நாகார்ஜூனாதான் ஹீரோ. அவருக்கு ஜோடியாக நடிக்கவிருந்தவர் திரிஷா. இந்தசமயத்தில்தான், தான் அடுத்து நடிக்கப் போகும் சத்யம் படத்தில், திரிஷாதான்ஹீரோயினாக நடிக்க வேண்டும் என விஷால் ஒன்றரைக் காலில் நிற்க ஆரம்பித்தார்.

திரிஷாவுக்கும் மேட்டரைச் சொல்லி டான் படத்திலிருந்து டஹால் வாங்க கோரினார். தட்ட முடியுமோ? உடனே லாரன்ஸைத் தொடர்பு கொண்ட திரிஷா, ஸாரி பாஸ்என்று கூறி கழன்று கொண்டு விட்டார்.

எல்லாம் ரெடி, திரிஷா வந்தால் ஷூட்டிங் போகலாம் என்று காத்திருந்த நாகர்ஜுனாவும், லாரன்ஸும் இதைக் கேட்டு அதிர்ச்சியாகி விட்டார்களாம். அதிலும்நாகர்ஜூனாவுக்கு ரொம்பவே கோபமாம்.

இருந்தாலும் பல்லைக் கடித்துக் கொண்டு சைலன்ட் ஆகி விட்டார். சமயம் வரும்போது வைப்போம் ஆப்பு என்று லாரன்ஸையும் கூல்படுத்தி வேறு ஆளைப் போட்டுபடத்தைத் தொடங்குமாறு கூறினாராம்.

விஷாலுடன், திரிஷா திடீரென நெருங்கிப் பழக இன்னொரு காரணத்தையும் சொல்கிறார்கள். அதாவது அவர் போக்கிரி படத்தில் விஜய்யுடன் ஜோடி போட பிரம்மப்பிரயத்தனம் செய்தார். ஆனால் அதை ஆசின் சைக்கிள் கேப்பில்தவிடுபொடியாக்கி திரிஷாவை அப்செட் செய்து விட்டார்.

சரி போனால் போகிறதென்று விட்ட திரிஷா, விஜய்யின் அடுத்த படமான அழகிய தமிழ்மகனிலாவது ஜோடி சேரலாம் என முயற்சித்தார். ஆனாலும் அதுவும்பலிக்கவில்லை.

இதனால் அப்செட் ஆகி விட்டாராம் திரிஷா. விஜய்தான் எனது பொருத்தமான ஜோடி என்று அவராகவே பெருமையடித்துக் கொண்டிருந்த திரிஷா, இனிமேல்விஜய்யுடன் ஜோடி சேரவே முடியாது என்று கூறுகிறார்கள்.

அந்த அளவுக்கு ஆசின் பிசின் போட்டு விஜய்யுடன் நட்பை ஏற்படுத்திக் கொண்டுள்ளார். எனவே திரிஷாவுக்கு இனிமேல் விஜய் கோட்டையில் இடம் இல்லைஎன்கிறார்கள். இதேபோல மற்ற ஹீரோக்களும் புதுப் புது நடிகைகளை தேட ஆரம்பித்து விட்டனர்.

இதனால்தான் விஜய்க்கு சரியான போட்டியாக கருதப்படும் விஷாலுடன் ஜோடி சேர முடிவு செய்தாராம் திரிஷா.

என்ன நடக்குதுன்னே புரியலையே பெரியசாமி!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil