»   »  பாரில் திரிஷாவுக்கு விழுந்த பளார்!!

பாரில் திரிஷாவுக்கு விழுந்த பளார்!!

Posted By:
Subscribe to Oneindia Tamil

பார்ட்டிக்குப் போய், பெரிய இடத்துப் பெண்ணுடன் மோதி, பளார் பளார் என அறை வாங்கித் திரும்பியுள்ளார் திரிஷா.

பார்ட்டிகளும் (தண்ணி பிளஸ் டான்ஸ்), திரிஷாவையும் எப்போதும் பிரித்துப் பார்க்கவே முடியாது. ஏற்கனவே மூன்று முறை மப்பில், தள்ளாடி போலீஸிடம் பிடிபட்டு திரும்பியவர் (திருந்தாமல்) திரிஷா.

சில மாதங்களுக்கு முன்பு கிழக்குக் கடற்கரை சாலையில் விஜய் வீட்டுக்கு இரண்டு தெரு முன்பாக, நடுத் தெருவில் தோழியர்களுடன் மப்பும், மந்தாரமுமாக ஆட்டம் போட்டு போலீஸிடம் திரிஷா மாட்டி மீண்டது நினைவிருக்கலாம்.

இதேபோல அடிக்கடி பார்ட்டிகளில் ஆட்டம் போட்டு ஏதாவது ஒரு சர்ச்சையில் சிக்கிக் கொள்வது திரிஷாவுக்கு வழக்கமாகி விட்டது. இரண்டு தினங்களுக்கு முன்பு மீண்டும் அப்படி ஒரு தண்ணி பார்ட்டிக்குப் போய் எக்குத்தப்பாக சிக்கிக் கொண்டார் திரிஷா.

அடையாறு ஏரியா பெயராலேயே அழைக்கப்படுகிறது பிரபல ஸ்டார் ஹோட்டல் அது. அங்குள்ள பார் மற்றும் டிஸ்கொதே ஹால், சென்னையிலேயே மிகவும் புகழ் பெற்றது. நகரின் விஐபி மனிதர்கள், அவர்களின் வாரிசுகள் என பெருந்தலைகள் கூடிக் குடித்துக் கும்மாளமிடுகிற இடம்.

இரண்டு தினங்களுக்கு முன்பு திரிஷா அந்த டிஸ்கொதே ஹாலுக்கு தோழிகள் புடை சூழ சென்றார். தாயாரும் உடன் சென்றார்.

தனது இஷ்ட பானமான, சுலாவில் (நாசிக்கில் மட்டுமே தயாராகிற ஸ்பெஷல் ஒயிட் ஒயின் இது) தாகம் தீர நீச்சலடித்தார்.

பின்னர் டிஸ்கொதே ஜோதியில் ஐக்கியமானார். நள்ளிரவைத் தாண்டிய பிறகும் திரிஷாவின் ஆட்டம் தொடர்ந்தது. ஒரு கட்டத்துக்கு மேல் பார்ட்டியிலிருந்து வெளியேற தயாராகினர் திரிஷாவும், அவரது தோழிகளும் (கொஞ்சம் தாமதித்திருந்தால் அதற்கு மேல் அங்கு சாதாரண ஆட்டம் நடந்திருக்காது, காமக் களியாட்டமாக மாறியிருக்கும்!).

வேகமாக ஹாலிலிருந்து வெளியே வந்தவர், ஒரு கனத்த உருவத்தின் மீது மோதிவிட்டார். இதையடுத்து இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

அப்போது திரிஷாவின் கன்னத்தில் அந்தப் பெண் பளார் என அறைந்தார். இதில் பொறி கலங்கிப் போனது திரிஷாவுக்கு.

இத்தனைக்கும் மரியாதைக்கு ஸாரி என்று சொன்னதைக் கூட அந்தப் பெண்மணி காதில் வாங்கிக் கொள்ளவே இல்லை. மாறாக, கோபத்தில் வாய்க்கு வந்தபடி நெட்டில் ஏற்ற முடியாத வார்த்தைகளில் திரிஷாவுக்கு அர்ச்சனை செய்தார்.

அதற்குள் இதைக் கவனித்து விட்ட ஹோட்டல் சிப்பந்திகளும், சில இளைஞர்களும் ஓடோடி வந்தனர் சம்பவ இடத்திற்கு. "மேடம், தயவு செய்து இங்கிருந்து போயுடுங்க. பிரச்சினை அதிகமாகி விடும்" என்று திரிஷாவை கிளப்புவதிலேயே குறியாக இருந்தனர்.

அவரோ, தன்னை அறைந்த பெண் யார் என்பதைத் தெரிந்து கொள்ள அங்கிருந்த ஊழியர்களிடம் திரும்பத் திரும்பக் கேட்டார். ஒரு கட்டத்தில் அவர்களும் அந்தப் பெண்மணி யார் என்பதைச் சொன்னார்கள். அவ்வளவுதான், அந்தப் பெயரைக் கேட்டதும், சுதி இறங்கிப் போன திரிஷா விட்டால் போதும் என்று காரில் ஏறிப் பறந்து விட்டார்.

சரி, யார் அந்த பவர்புல் பெண்மணி? சென்னை நகரின் பவர்புல் போலீஸ் அதிகாரி ஒருவரின் மனைவிதான் அவர். அந்தப் போலீஸ் அதிகாரிதான் ஏற்கனவே இருமுறை திரிஷாவைப் பிடித்து போனால் போகட்டும் என்று எச்சரித்து அனுப்பியவராம்.

இப்போது புரிகிறதா, திரிஷா ஓட்டத்தின் பின்னணி என்னவென்று!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil