வதந்திகளால் தவிக்கும் த்ரிஷா

By Staff

த்ரிஷாவைப் பற்றி தொடரும் வதந்திகளால் அதிர்ந்து போயிருக்கிறதுஅவரது குடும்பம்.

நடிகை த்ரிஷா தற்கொலை செய்து கொண்டார், நடிகர் விஜய்யைக் காதலிக்கிறார், அப்பாவை வீட்டை விட்டுதுரத்தி விட்டார், அப்பா ஹோட்டலில் சர்வர் வேலை பார்க்கிறார், அம்மாவும் பொண்ணும் சேர்ந்து பைவ் ஸ்டார்ஹோட்டல்களில் ஊத்துகிறார்கள் என்று த்ரிஷாவைப் பற்றி பல தரப்பட்ட செய்திகள் இறக்கை முளைத்துபறந்தபடி இருக்கின்றன.

சென்னையிலேயே வசித்தாலும் அம்மாவும் பொண்ணும் தனித்தனியாகவே வீடுகளில் வசிக்கிறார்கள். இதைவைத்தும் பல வதந்திகள் கோடம்பாக்கத்தில் சுற்றிச் சுற்றி வருகின்றன.

அதே போல சமீபத்தில் கில்லி படத்தின் வெற்றிக்காக த்ரிஷா பைவ் ஸ்டார் ஹோட்டலில் கொடுத்தஒரு பார்ட்டிக்கான சில லட்ச பில்லை ஒரு தயாரிப்பாளர் செட்டில் செய்தாராம். இதனால்அவருக்கும் த்ரிஷாவுக்கு அது என்று செய்தி பரவியது.

மேலும் தெலுங்கில் படத்துக்கு ரூ. 60 லட்சம் வாங்கும் த்ரிஷா, ஆந்திராவில் சூட்டிங்கில் இருந்தால்விஐபிக்கள் அவரைப் பார்க்க வந்துவிடுகிறார்கள் என்கிறார்கள்.

இதற்கெல்லாம் உச்சகட்டமாக விபத்தில் த்ரிஷா இறந்து விட்டார் என்று கோடம்பாக்கத்தில் திடீர் புரளி பரவிஅதிர்ச்சியலையைப் பரப்பியது. இந்தச் செய்திகளால் நொந்து போயிருக்கிறதாம் த்ரிஷாவின் குடும்பம்.

த்ரிஷாவுக்கு என்னாச்சு என்று அஜீத், தரணி, விஜய், பிரகாஷ்ராஜ், ஏ.எம்.ரத்னம் என திரையுலகின் முக்கியப்பிரமுகர்கள் எல்லாம் தொலைபேசியில் அழைத்து துக்கம் விசாரித்துள்ளார்கள். த்ரிஷா இறந்து போய் விட்டார்என்று அவரது அம்மா உட்பட அனைவரது செல்போனிலும் கடந்த வாரம் எஸ்.எம்.எஸ். செய்தி வந்து டென்சனைகூட்டியிருக்கிறது.

என்னதான் ஆச்சு என்று த்ரிஷாவைக் கேட்டால், இது பற்றிய கவலை எதுவும் இன்றி ரிலாக்ஸாகவே பதில்தருகிறார்.

எதற்கு கவலைப்படவேண்டும்? முதலில் இந்த விஷயங்களைக் கேட்கும்போதுதான் அதிர்ச்சியாக இருந்ததது.பிறகு ஜோக் போல இதை சுலபமாக ஏத்துக்கிட்டேன். எம்.பி.ஏ முடித்துவிட்டு பிரண்ட்ஸ்கள் ஏற்கனவே செட்டில்ஆகிவிட்ட ஆஸ்திரேலியாவில் குடியேறிவிடும் கனவில் இருந்தேன்.

1999ம் வருடம் மிஸ் சென்னை பட்டம் கிடைத்த பிறகு வாழ்க்கையே மாறிவிட்டது. லேசா லேசா படத்தில் சின்னரோலுக்காக பிரியதர்ஷன் கூப்பிட்டபோது மறுக்க முடியவில்லை. அப்புறம் படங்கள் வரிசையாக ஹிட்டாகி தமிழ்.தெலுங்கு என பிஸியாகி விட்டேன்.

இப்போது நானே நினைத்தாலும் சினிமாவை விட்டு ஒதுங்கிவிட முடியாத சூழல். நான் இந்த வாழக்கையைசந்தோஷமாகவே வாழ்ந்து கொண்டிருக்கிறேன். என் வளர்ச்சியைப் பொறுக்காத சிலர்தான் வதந்திகளைக்கிளப்பிவிடுகிறார்கள் என்று நினைக்கிறேன்.

அப்பா ஒரு பெரிய ஹோட்டலில் உயர் அதிகாரியாக வேலை செய்கிறார். அது எனக்குப் பெருமைதான். அவரைநான் ஏன் வீட்டை விட்டுத் துரத்தப் போகிறேன். பிறகு இந்தக் காதல். முதலில் ஜோதிகிருஷ்ணாவுடன் காதல்என்றார்கள். பிறகு சிம்புவுடன் இணைத்துப் பேசினார்கள். இப்போது விஜய். நாங்கள் நல்ல நண்பர்கள். நட்பாகஇருப்பது தப்பா?

அம்மாவும் நானும் சேர்ந்து தண்ணியடிக்கிறோம் என்று வதந்தி கிளப்புகிறார்கள். எந்தப் பிரச்சினை வந்தாலும்நான் தைரியமாக சமாளிப்பேன் என்கிறார் த்ரிஷா.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X