»   »  தினுசு த்ரிஷா

தினுசு த்ரிஷா

Posted By:
Subscribe to Oneindia Tamil

த்ரிஷாவுக்கு மாடர்ன் டிரஸ்தான் ரொம்ப இஷ்டம். மாமியாக இருந்தாலும் கூட அவரை மடிசாரில் பார்த்தவர்கள்ரொம்பக் குறைவாகத்தான் இருப்பார்கள். அந்த அளவுக்கு புடவை என்றாலே காத தூரம் ஓடுபவர் த்ரிஷா.

ஆனால் இப்போதெல்லாம் த்ரிஷாவுக்கு புடவையைப் பார்த்தாலே ரொம்ப இஷ்டமாக இருக்கிறதாம்.தீபாவளிக்குக் கூட மாடர்ன்ஸ் டிரஸ்களை விட நிறைய புடவைகளைத்தான் வாங்கிக் குவித்துள்ளாராம்.

அக்காவுக்கு என்ன திடீர்னு புடவை மீது மோகம் என்ற கேள்வி எழலாம். உள்ளே பெரிய மேட்டர் இருக்கிறது.அம்மணிக்கு கொஞ்ச நாளாகவே சமூக சேவை, அரசியல் ஆர்வம் பூத்திருக்கிறதாம்.

அதுவும் ரசிகை மன்றம் ஆரம்பித்த பின்னால் சமூக சேவை மீது ரொம்பப் பற்றுதல் ஏற்பட்டுள்ளதாம்.அதேபோல அரசியல் ஆர்வம் கண்ணாபின்னாவென அதிகரித்துள்ளதாம். குறிப்பாக விஜயகாந்த் செய்யும்அரசியல் அவரை ரொம்பவேக் கவர்ந்துள்ளதாம்.

உங்களுக்கும் நல்ல செல்வாக்கு உள்ளது. அரசியலில் குதித்தால் அள்ளிப்புடலாம்ல என்று கூட இருப்பவர்கள்அவ்வப்போது ஊதி விடவே அதை சீரியஸாக எடுத்துக் கொள்ள ஆரம்பித்துள்ளார் த்ரிஷா.

இதனால்தான் புடவை கட்டி பாந்தமான தோற்றத்தைப் பெற ஆசைப்படுகிறாராம் த்ரிஷா. இப்போதெல்லாம்வெளி நிகழ்ச்சிகளுக்கு நச்சக் நச்சக் மாடர்ன் டிரஸ்களில்தான் வந்து விருந்தளிக்கிறார் த்ரிஷா. இனிமேல்படிப்படியாக புடவைக்கு மாறப் போகிறாராம் இந்த புடலைங்காய் மாமி.

அதற்காகத்தான் இப்போதெல்லாம் சேலை மீது ஆசை பிறந்திருக்கிறதாம். முதலில் லோக்கலாக புடவையில்அசத்தி அப்படியே பொது நிகழ்ச்சிகளுக்கும் புடவை தரிசனம் கொடுக்கப் போகிறாராம் த்ரிஷா.

த்ரிஷா ஒரு தினுசுதான் ஓய்...

Read more about: trishas political interest

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil