தமாஸ் நடிகர் போல நானும் ஆகணும்.. நம்பர் நடிகையை மலையாய் நம்பும் டிவி நடிகர்.. கை கொடுக்குமா?
சென்னை: குழந்தை நட்சத்திரங்கள் எல்லாம் ஹீரோக்களாக மாறி கலக்கி வருகின்றனர். ஆனால், அந்த டிவி நடிகர் தமாஸ் நடிகர் போல மாற வேண்டும் என தனக்கான டிராக்கை பிடிக்காமல் வேறு ஒருவரின் நகலாக மாற ஆசைப்படுவது தான் அவரது வளர்ச்சி தடைபடக் காரணம் என்கின்றனர்.
நம்பர் நடிகை நடித்த படங்கள் கோலிவுட்டில் பெரிதாக ஓடாமல் ஃப்ளாப் ஆகி அவருக்கு பட வாய்ப்புகளே இல்லாமல் காலியாகி விட்டது. மற்ற மொழிகளில் மட்டுமே நடிகையை நம்பி பட வாய்ப்புகளை கொடுத்து வருகின்றனர்.

அங்கே வேற நடிகைகளை பார்த்து பார்த்து போர் அடித்துப்போன ரசிகர்கள் நம்பர் நடிகையை வரவேற்று வருகின்றனர். ஆனால், தமாஸ் நடிகர் டிராக்கை ஃபாலோ செய்கிறேன் என டிவி நடிகர் மீண்டும் நம்பர் நடிகையை நம்பிக்கொண்டிருக்கும் நிலையில், அவருக்கு இந்த முறையாவது வெற்றி கிடைக்குமா? என்கிற கேள்வி எழுந்துள்ளது.
கோட்டை விட்ட டிவி நடிகர்: தமிழ் சினிமா ரசிகர்கள் முன்பை போல நட்சத்திர நடிகர்கள் பின்னாடி எல்லாம் போவது கிடையாது. அவர்கள் தங்கள் ரூட்டை எப்போதோ மாற்றிவிட்டனர். வம்பு நடிகருக்கும், ஒல்லி நடிகருக்கும் கூட அதிக ரசிகர் வட்டம் இல்லாமல் போக காரணமே அதுதான். ஆனால், தமாஸ் நடிகருக்கு கிடைத்த வரவேற்பை போல தனக்கும் கிடைக்கும் என எதிர்பார்த்த டிவி நடிகர் தொடர்ந்து சுமார் படங்களில் நடித்து தனக்கு கிடைத்த ஆரம்பகால நல்ல வரவேற்பை கோட்டை விட்டுள்ளார்.
நம்பர் நடிகையை நம்பி: ஆரம்பத்தில் நம்பர் நடிகையுடன் இவர் வேறு ஒரு கதாபாத்திரத்தில் நடிப்பதாக வதந்திகள் வைரலாகின. ஆனால், கடைசியில், இருவரும் ஜோடி போட்டு நடிப்பதாக தெரிய வந்த நிலையில், ரசிகர்களே டிவி நடிகருக்கு அந்த வயதான நடிகை கொஞ்சம் கூட ஜோடியாக செட்டாகவில்லை என கலாய்க்க ஆரம்பித்து விட்டனர். இந்நிலையில், நம்பர் நடிகையை நம்பி மீண்டும் ஒரு சொதப்பல் படத்தைக் கொடுக்கப் போகிறாரா டிவி நடிகர் என அவரது ரசிகர்களே ஷாக் ஆகியுள்ளனர்.
ஹிட் கொடுத்தால் மட்டுமே: தமாஸ் நடிகர் மாஸ் நடிகர் போல ஆக வேண்டும் என அவரது ஸ்ட்ராங் ஜோனை விட்டு புரட்சி பண்ண ஆரம்பித்த நிலையில், ரசிகர்கள் அவரை புரட்டி எடுத்துவிட்டனர். இந்நிலையில், தமாஸ் நடிகர் போல ஆக நினைக்காமல் தனக்கு எது செட் ஆகும் என தெரிந்து அந்த ரூட்டில் டிவி நடிகர் பயணித்தால் மட்டுமே வெற்றி கிடைக்கும் என்றும் இன்றைய சினிமா உலகில் ஹிட் கொடுத்தால் மட்டுமே மதிப்பார்கள் என்றும் கோடம்பாக்கத்தில் பேசிக் கொள்கின்றனர்.


Click it and Unblock the Notifications