டிவி நடிகருக்கு எதற்கு இந்த தேவையில்லாத வேலை?
சென்னை: டிவி நடிகருக்கு இந்த தேவையில்லாத வேலை ஏன் என்று தான் அவரின் நலம்விரும்பிகள் கேட்கின்றனர்.
சின்னத்திரையில் இருந்து பெரிய திரைக்கு வந்து அசுர வேகத்தில் வளர்ச்சி அடைந்தவர் அந்த நடிகர். அதிகாலை காட்சி வைக்கும் அளவுக்கு அவர் முன்னேறியுள்ளார்.
அவரின் இந்த வளர்ச்சியை பார்த்து கோலிவுட்காரர்கள் பலரே கடுப்பில் உள்ளனர்.

கோட் நடிகர்
வளர்ந்து நிற்கும் நிலையில் டிவி நடிகர் வழி மாறிச் செல்கிறாரோ என்று நினைக்க வைத்துள்ளது அவர் நடிப்பில் அண்மையில் வெளியான படம். அந்த படத்தில் அவர் கோட் நடிகருக்கு ஆதரவாக பேசியிருந்தார். மேலும் லீடரை கிண்டல் செய்தது போன்று சில காட்சிகள் இருந்தது.

டிவி நடிகர்
டிவி நடிகருக்கு கோட் நடிகரை மிகவும் பிடிக்கும் என்றால் அதை அவருடன் வைத்துக் கொள்ள வேண்டும். அதை விட்டுவிட்டு தேவையில்லாமல் கோட் நடிகரை ஆதரித்தும் மற்றொரு நடிகரை மறைமுகமாக தாக்கியும் வசனங்கள் பேசி நடிப்பது அவருக்கு நல்லது இல்லை.

காப்பி
டிவி நடிகர் தனது சமீபத்திய படத்தில் உச்ச நடிகர் போன்று சில காட்சிகளில் மேனரிசம் செய்துள்ளார். ஏற்கனவே ஒரு முன்னணி நடிகர் உச்ச நடிகரை காப்பி அடித்து நடித்து வரும் நிலையில் டிவி நடிகரும் அதையே செய்துள்ளார். மேலும் அந்த மேனரிசம் அந்த முன்னணி நடிகரை கலாய்ப்பது போன்றும் இருந்தது.

கெரியர்
உச்ச நடிகரின் கதை தேர்வு அண்மை காலமாக சரியில்லை. அவர் கதையை தேர்வு செய்வதில் கூடுதல் கவனம் செலுத்தினால் நல்லது. மேலும் தன்னை வளர்த்து விட்டவரை சீண்டாமல் இருப்பதும் அவருக்கு நல்லது. நல்ல நடிகர் ஆனால் அவராக வழி தவறி செல்கிறாரா இல்லை யாராவது அவரை தூண்டுகிறார்களா என்பது தெரியவில்லை.


Click it and Unblock the Notifications











