ராசி இல்லை: சர்ச்சை நடிகையுடன் இனி நடிக்க மாட்டாராம் டிவி நடிகர்
Recommended Video
சென்னை: இனி சர்ச்சை நடிகையுடன் சேர்ந்து நடிப்பது இல்லை என்று முடிவு செய்துள்ளாராம் டிவி நடிகர்.
டிவி நடிகர் வாரிசு இயக்குநரின் படத்தில் சர்ச்சை நடிகையுடன் சேர்ந்து நடித்தார். பெரிய நடிகையுடன் சேர்ந்து நடிக்கும் அளவுக்கு வளர்ந்துவிட்டார் டிவி நடிகர் என்று கூறப்பட்டது.
அந்த படம் எதிர்பார்த்த அளவுக்கு போகவில்லை. இதையடுத்து அவர் மீண்டும் சர்ச்சை நடிகையுடன் ஜோடி சேர்ந்து நடித்தார். இரண்டாவது முறையாக சேர்ந்து நடித்த படமும் ஓடவில்லை.

மொக்கை
சொல்லப்போனால் அண்மையில் வெளியான அந்த படத்தை முழுவதும் பார்க்கும் பொறுமை கூட பலருக்கு இல்லாமல் போய்விட்டது. சர்ச்சை நடிகையின் நடிப்பை பார்த்து எரிச்சல் அடைந்தவர்கள் பலர். நடிகர் தேவையில்லாமல் சில வசனங்களை பேசி சர்ச்சையை கிளப்பினார்.

சர்ச்சை நடிகை
சர்ச்சை நடிகையுடன் இனியும் சேர்ந்து நடித்தால் நம் கெரியர் காலியாகிவிடும் என்ற முடிவுக்கு வந்துவிட்டாராம் டிவி நடிகர். அதனால் இனி சர்ச்சை நடிகையுடன் சேர்ந்து நடிக்கவே கூடாது என்று முடிவு எடுத்துள்ளாராம் டிவி நடிகர்.

டிவி நடிகர்
வழக்கமாக டிவி நடிகர் ஒரு நடிகையுடன் இரண்டு படங்களுக்கு மேல் சேர்ந்து நடிக்க மாட்டார். அப்படி நடித்தால் தேவையில்லாத கிசுகிசுக்கள் வரும் என்பதால் நடிப்பது இல்லை. ஆனால் சர்ச்சை நடிகை விஷயத்தில் வெற்றி கிடைப்பது இல்லை என்பதால் இனி அவருடன் சேர்ந்து நடிப்பதை தவிர்க்க விரும்புகிறாராம்.

பிளாப்
டிவி நடிகர் சர்ச்சை நடிகை மட்டும் அல்ல அந்த சிரிப்பு நடிகையுடன் சேர்ந்து நடித்த படமும் ஓடவில்லை. அந்த படத்திற்கு பில்ட்அப் எல்லாம் பெரிதாக கொடுத்தார்கள். ஆனால் படத்தை பார்த்தவர்கள் கழுவிக் கழுவி ஊத்தினார்கள். அநேகமாக அந்த நடிகையுடனும் இனி ஜோடி சேர மாட்டார்.


Click it and Unblock the Notifications











