ஆசையை வாய்விட்டுக் கூறியும் டிவி நடிகரை கண்டுக்காத பெரிய முதலாளி
Recommended Video

சென்னை: பெரிய முதலாளி வீட்டிற்கு போகத் துடித்த நடிகரை தேர்வு செய்யவில்லை.
பெரிய முதலாளி நிகழ்ச்சியின் 2வது சீசன் அமர்க்களமாக துவங்கியுள்ளது. இந்த சீசனில் பவர் நடிகர் கலந்து கொள்வார் என்று செய்திகள் வெளியாகின. அவரும் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதாக பேட்டி கூட அளித்தார்.
முதலாளி வீட்டில் உள்ள சிறை தனக்காக தான் என்றெல்லாம் கூறினார். கடைசியில் அவர் பங்கேற்கவில்லை.

ஆசை
பெரிய முதலாளி நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் சேனலில் வெளியாகும் சீரியலில் நடிப்பவர் அந்த உயரமான நடிகர். படங்களிலும் நடித்துள்ள அவருக்கு பெரிய முதலாளி வீட்டிற்கு செல்ல வேண்டும் என்று ஆசை.

வாய்ப்பு
பெரிய முதலாளி வீட்டிற்கு சென்றால் நம்மை நாமே அறிந்து கொள்ள முடியும் என்று நம்புகிறார் அந்த நடிகர். அதனால் தன்னை பற்றி தனக்கே தெரியாத விஷயங்களை தெரிந்து கொள்ள பெரிய முதலாளி வீட்டிற்கு செல்ல விரும்புவதாக கூறினார்.

இல்லையே
உயர்ந்த நடிகர் தனது ஆசையை வாய் விட்டு கூறியும் தொலைக்காட்சி சேனலோ அவரை போட்டியாளராக ஏற்கவில்லை. அவர் பாட்டுக்கு பெரிய முதலாளி வீட்டிற்கு போய்விட்டால் அவர் நடித்து வரும் சீரியல் பாதிக்கும் என்று சேனல் நினைத்திருக்கலாம்.

நடிகர்
இந்த முறை உயர்ந்த நடிகர் பெரிய முதலாளி வீட்டிற்கு வருவார் என்றே தகவல்கள் வெளியாகின. பரவாயில்லை அடுத்த முறை பார்க்கலாம். யார் கண்டது ஒயில்டு கார்டு மூலம் கூட வரலாமே.


Click it and Unblock the Notifications










