»   »  டிவியே போதும்... ஆட்டத்தை அடக்கிக்கொண்ட ஹீரோ

டிவியே போதும்... ஆட்டத்தை அடக்கிக்கொண்ட ஹீரோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

சிவகார்த்திகேயனின் அபரித வளர்ச்சி முன்னணி ஹீரோக்களுக்கு வயிற்றெரிச்சலை கிளப்பி விட்டது போலவே டிவி விஜேக்களுக்கும் ரேடியோ ஆர்ஜேக்களுக்கும் நிறைய சந்தோஷத்தை கொடுத்தது. அவர் போட்டுக்கொடுத்த பாதையில் அலுங்காமல் குலுங்காமல் போகலாமே?

ஆனால் மிமிக்ரி பண்ணுபவர்கள் எல்லாம் சிவா ஆக முடியுமா? சிவாவை ஜெராக்ஸ் அடிக்க நினைத்தவர்கள் எல்லாம் காணாமல் போய்க்கொண்டிருக்கிறார்கள். அந்த லிஸ்டில் இருந்து ஜஸ்ட் மிஸ் ஆகி எஸ்கேப் ஆகியிருக்கிறார் இனிஷியல் தொகுப்பாளர். இவர் சில படங்களில் ஹீரோவாக தலைகாட்ட தொடங்கிய உடனேயே ஓவராக ஆட தொடங்கினாராம். உடனே கழட்டி விட்டது தமிழ் சினிமா.

சரி... இருக்கறதையும் விட்டுடக்கூடாது என்று டிவி சேனலை விடாமல் கெட்டியாக பிடித்துக்கொண்டாராம். இன்னும் இரண்டு நிகழ்ச்சிகளுக்கு நடிகரை விஜேவாக்கி விட்டது சேனல்.

Read more about: gossip, கிசுகிசு
English summary
Initial VJ actor has again returned to tv after some failures in cinema.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil