சீரியல் நடிகையிடம் இயக்குநர் சில்மிஷம் .. ஆதாரத்தை கையில் வைத்துக் கொண்டு ஆட்டம் காட்டும் நடிகை

சென்னை: சினிமா உலகை அவ்வப்போது உலுக்கி வரும் 'மீ டூ' (Me Too) புயல், அவ்வப்போது சின்னத்திரை பக்கமும் பலமாக வீசாமல் இல்லை. பிரபல முன்னணி தொலைக்காட்சித் தொடர் ஒன்றின் இயக்குநருக்கும், அதில் நடித்து வரும் இளம் நடிகை ஒருவருக்கும் இடையே ஏற்பட்டுள்ள மோதல் தான் இப்போது சின்னத்திரை வட்டாரத்தின் ஹாட் டாபிக்.

சம்பந்தப்பட்ட அந்த சீரியல் இயக்குநர், படப்பிடிப்பு தளத்தில் ஆரம்பத்தில் இருந்தே அந்த நடிகையிடம் அட்ஜஸ்ட்மென்ட் கேட்டு மறைமுகமாக டார்ச்சர் செய்து வந்ததாகக் கூறப்படுகிறது. நாளுக்கு நாள் இயக்குநரின் அத்துமீறல்கள் எல்லை மீறவே, அந்த நடிகை அவரிடம் இருந்து நாசூக்காக விலகிப் போக முயன்றுள்ளார். ஆனால், "சொல்வதைக் கேட்காவிட்டால் சீரியலை விட்டே தூக்கிவிடுவேன், உனது கதாபாத்திரத்தைக் கொலை செய்வது போல காட்சியை மாற்றிவிடுவேன்" என இயக்குநர் மிரட்டல் விடுத்ததாகத் தெரிகிறது.

கச்சிதமாகச் சிக்கிய ஆதாரம்: இயக்குநரின் தொடர் தொல்லைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க நினைத்த நடிகை, மிகச் சாதுரியமாகச் செயல்பட்டுள்ளார். இயக்குநர் தன்னிடம் போனில் அநாகரீகமாகப் பேசிய ஆடியோ பதிவுகள், வாட்ஸ்அப்பில் அனுப்பிய இரட்டை அர்த்த மெசேஜ்கள் மற்றும் படப்பிடிப்பு தளத்தில் தவறான நோக்கத்தில் தொட முயன்ற வீடியோ காட்சிகள் என அனைத்தையும் டிஜிட்டல் ஆதாரங்களாகத் தனது மொபைலில் கச்சிதமாகச் சேகரித்து வைத்துள்ளார்.

TV Actress Allegedly Holds Evidence Against Director Small Screen Industry Abuzz Over Controversy

ஆட்டம் காட்டும் நடிகை: தற்போது அந்தப் பலமான ஆதாரங்களை கையில் வைத்துக் கொண்டு, இயக்குநர் மற்றும் சீரியல் தயாரிப்பு தரப்பிற்கு அந்த நடிகை தண்ணி காட்டி வருகிறார். "என்னை சீரியலை விட்டு நீக்கினால், மொத்த ஆதாரங்களையும் சமூக வலைதளங்களில் வெளியிட்டு, காவல் நிலையத்திலும் புகார் அளிப்பேன்" என நடிகை அதிரடி காட்டியுள்ளார்.

பயம்: இதனால் அதிர்ச்சியடைந்த இயக்குநர், தனது கேரியர் மற்றும் மானம் கப்பலேறிவிடுமோ என்ற பயத்தில், அந்த நடிகையைக் கண்டாலே இப்போது படப்பிடிப்பு தளத்தில் ஓடி ஒளியும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார். தயாரிப்பு தரப்பும் இந்த விவகாரத்தை வெளியாட்கள் யாருக்கும் தெரியாமல் சமரசமாக முடித்துப் போக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக சின்னத்திரை வட்டாரங்கள் முணுமுணுக்கின்றன. மொத்தத்தில் இயக்குநரின் குடிமியே நடிகை கையில் இருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X