அந்த ஆசையால் வாரிசு நடிகரை நம்பி.. வாழ்க்கையைத் தொலைத்த சீரியல் நடிகை
சென்னை: சின்னத்திரையில் குடும்ப குத்துவிளக்காக அறிமுகமாகி, ஒட்டுமொத்த தமிழ் இல்லத்தரசிகளின் மனங்களையும் வென்றெடுத்த அந்த சீரியல் நடிகைக்கு, ஆரம்பத்திலிருந்தே வெள்ளித்திரையில் தடம் பதிக்க வேண்டும் என்பதுதான் தீராத ஆசையாக இருந்திருக்கிறது. சீரியல் மூலம் கிடைத்த புகழை வைத்து எப்படியாவது சினிமாவில் ஒரு ரவுண்டு வந்துவிடலாம் என்று அவர் பகல் கனவு கண்டு வந்தாராம்.
அப்படி ஒரு சூழ்நிலையில்தான், கோலிவுட்டில் வலம் வரும் அந்தப் பிரபல வாரிசு நடிகரின் நட்பு அவருக்குக் கிடைத்திருக்கிறது. பெரிய பின்னணி கொண்ட அந்த வாரிசு நடிகர், சீரியல் நடிகையின் சினிமா ஆசையைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டதாகக் கூறப்படுகிறது. "என்னுடைய அடுத்த படத்தில் உனக்குத்தான் ஹீரோயின் சான்ஸ்... பெரிய இயக்குநர்களிடம் உன்னைப்பற்றிப் பேசுகிறேன்" என்று நடிகை காதில் தேனைப் பாய்ச்சியுள்ளார் அந்த வாரிசு.
வாரிசு நடிகர் கொடுத்த வாக்குறுதிகளை அப்படியே நம்பிய அந்த நடிகை, சினிமா கனவில் மிதக்கத் தொடங்கினார். நடிகரின் சொகுசு பங்களா பார்ட்டிகள், அவுட்டிங் என எப்போதும் அவருடனேயே வலம் வர ஆரம்பித்தார். இதற்கிடையே, வாரிசு நடிகரின் ஆசை வார்த்தைகளை நம்பி, தனக்கு சின்னத்திரையில் வந்த முன்னணி சீரியல் வாய்ப்புகளையும், லட்சக்கணக்கில் சம்பளம் தர முன்வந்த விளம்பரங்களையும் "நான் சினிமாவுக்குப் போகப் போகிறேன்" என்று கூறி கறாராக மறுத்துவிட்டார்.

புதிய தோழியுடன் நடிகர்: ஆனால், நாட்கள் நகர நகரத்தான் அந்த வாரிசு நடிகரின் அசல் முகம் நடிகைக்குத் தெரியவந்திருக்கிறது. தான் ஆசைப்பட்டபடி பட வாய்ப்புகளும் வரவில்லை, சொன்னபடி அந்த நடிகர் எந்தப் பெரிய இயக்குநரிடமும் இவரைப் பற்றிப் பேசவும் இல்லை என்பது நடிகைக்குப் புரியவந்தது. ஒருகட்டத்தில், நடிகையை முழுமையாகப் பயன்படுத்திக் கொண்ட அந்த வாரிசு நடிகர், மெல்ல மெல்ல அவரிடமிருந்து விலகத் தொடங்கி, இப்போது வேறு ஒரு புதிய தோழியுடன் நெருக்கமாகிவிட்டாராம்.
ஏமாற்றத்தில் நடிகை: சினிமா ஆச காட்டி, தன்னை நடுரோட்டில் விட்டுவிட்டாரே என்று அந்த சீரியல் நடிகை இப்போது கவலையில் மூழ்கியுள்ளார். சினிமா வாய்ப்பும் கிடைக்காமல், கையில் இருந்த சீரியல் வாய்ப்புகளையும் கோட்டைவிட்டு, தற்போது வருமானத்திற்கும் வழியில்லாமல் அந்த நடிகை தவித்து வருவதாக சின்னத்திரை வட்டாரத்தில் பரிதாபமாகப் பேசிக் கொள்கிறார்கள். "பெரிய இடத்து வாரிசை நம்பி, வாழ்க்கையைத் தொலைச்சிட்டாரே..." என்று நடிகையின் நெருங்கிய தோழிகள் கவலை தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications