வாரிசை வளைத்துப் போட டிவி நடிகை திட்டம்.. நைட் முழுக்க விடவே இல்லையாம்.. எங்கே போய் முடியப் போகுதோ!

By Staff

மும்பை: அந்த பிரபல நடிகரின் வாரிசு மீது டிவி நடிகை ஒருவர் பார்த்த மாத்திரத்திலேயே காதலில் விழுந்து விட்டதாக பேச்சுக்கள் கிளம்பி உள்ளன.

ஜாலியாக நடிகைகளுடன் பார்ட்டி செய்வது என சுற்றித் திரிந்து வரும் அந்த வாரிசு நடிகையின் காதலை கொஞ்சம் கூட ஏற்க மறுத்து இதெல்லாம் வேண்டாத வேலை என சொல்லி விட்டாராம்.

ஆனால், நடிகை கட்டினா உங்களைத்தான் கட்டுவேன் என ஒற்றைக் காலில் அடம் பிடித்ததாக பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.

பார்ட்டியில் சந்திப்பு

பார்ட்டியில் சந்திப்பு

சமீபத்தில் வாரிசு வைத்த பிரம்மாண்ட சரக்கு பார்ட்டியில் கலந்து கொண்ட டிவி நடிகைக்கு அந்த வாரிசை பார்த்ததும் அவர் நடிகையிடம் பேசிய விதம் மற்றும் நெருக்கமாக பழகிய விதம் என அனைத்துமே பிடித்துப் போன நிலையில், எப்படியாவது இந்த வாரிசை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்கிற முடிவுக்கே வந்து விட்டாராம்.

கேர்ள் ஃபிரெண்டே இல்லை

கேர்ள் ஃபிரெண்டே இல்லை

மேலும், இதுவரை அந்த வாரிசுக்கு பெரிதாக எந்தவொரு கேர்ள் ஃபிரெண்டும் இல்லாததை நோட் செய்த அந்த டிவி நடிகை எப்படியாவது தனது காதலை சொல்லி அந்த வாரிசை வளைத்துப் போட்டு விடலாம் என நினைத்து இருக்கிறார். நிகழ்ச்சியில் படு தாராளமாக கவர்ச்சி காட்டி எந்தளவுக்கு முடியுமோ அந்த அளவுக்கு அந்த வாரிசுடன் நெருங்கி பழகி உள்ளார்.

படு நெருக்கமாக

படு நெருக்கமாக

அந்த பார்ட்டி முடிவதற்குள் தனது அழகால் அந்த வாரிசை மயக்கி விடலாம் என நடிகை ரொம்பவே கடுமையான முயற்சிகளை மேற்கொண்டார் என்றும் கூறப்படுகிறது. நடிகை ரொம்பவே க்ளோஸ் ஆக ஜாலியாக பழகுவதை பார்த்த அந்த வாரிசும் அவரிடம் படு நெருக்கமாக பழகி இருக்கிறார். ஆனால், கடைசியில் டிவி நடிகையின் ஐடியா தெரிந்ததும் அப்செட் ஆகி விட்டாராம் அந்த வாரிசு.

காதலை சொன்ன நடிகை

காதலை சொன்ன நடிகை

ஒரே நாளில் பெரிய இடத்துப் பிள்ளையை பார்த்த உடனே காதல் கொண்ட அந்த டிவி நடிகை தனது காதலையும் தைரியமாக சொல்லி அவருக்கு ப்ரபோஸ் செய்து விட்டாராம். ஆனால், ஸாரி அக்கா நான் ரொம்ப சின்னப் பையன், இப்போதைக்கு எனக்கு லவ்லலாம் இன்ட்ரஸ்ட் இல்லை என பொசுக்கென சொல்லி டிவி நடிகையின் ஆசையில் மண்ணை அள்ளிப் போட்டு விட்டார் என்று பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.

கதறி அழுத நடிகை

கதறி அழுத நடிகை

சக தோழிகளிடம் எப்படியாவது வாரிசை மடக்கிக் காட்டுகிறேன் என சவால் விட்ட நிலையில், கடைசியில் எதுவுமே செட்டாகாத நிலையில், டிவி நடிகை கதறி அழுததாக தகவல்கள் கசிந்துள்ளன. நடிகையின் தோழிகள் அவரது நிலைமையை பார்த்து விழுந்து விழுந்து சிரித்து அவரை மேலும், வெறுப்பேற்றி உள்ளதாக கூறுகின்றனர்.

விடமாட்டேன்

விடமாட்டேன்

ஆனால், அந்த டிவி நடிகை எப்படியாவது அந்த வாரிசை என் பாய் ஃபிரெண்டாக மாற்றாமல் விட மாட்டேன் என சொல்லி விட்டு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எல்லாம் அவருடன் நெருக்கமாக இருக்கும் போட்டோக்களை பதிவிட்டு ரசிகர்களுக்கு டவுட்டை கிளப்பும் வகையில் ஏகப்பட்ட வேலைகளை செய்து வருவதாக அதிர்ச்சி தகவல்களும் கசிந்துள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X