ஒருவழியாக பாட்னரை தேடிப் பிடித்த சின்னத்திரை நடிகை.. இன்னொரு சேனல் நடிகை மீதுதான் தீராத காதலாம்

By Staff

சென்னை: சென்னை: சின்னத்திரை உலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் ஒருவர் குறித்து கடந்த சில வாரங்களாக பரவி வரும் தகவல்கள், ரசிகர்கள் மத்தியில் புதிய விவாதத்தை கிளப்பியுள்ளன. பல ஆண்டுகளாக தனிப்பட்ட வாழ்க்கை குறித்து எந்த தகவலையும் வெளிப்படையாக பகிராமல் இருந்து வந்த அந்த நடிகை, சமீப காலமாக சமூக வலைதளங்களில் செய்து வரும் சில பதிவுகளே இந்த பேச்சுகளுக்கு காரணமாக அமைந்துள்ளன.

சீரியல்களில் குடும்பப் பாங்கான கதாபாத்திரங்களில் நடித்து வந்தாலும், நிஜ வாழ்க்கையில் மிகவும் தனிமையை விரும்பும் குணம் கொண்டவராகவே அந்த நடிகை அறியப்படுகிறார். படப்பிடிப்பு, நிகழ்ச்சிகள் மற்றும் விளம்பர ஒப்பந்தங்கள் என பிஸியாக இருந்து வந்த அவர், கடந்த ஓராண்டாக குறிப்பிட்ட ஒருவருடன் அதிக நேரம் செலவழித்து வருவதாக கூறப்படுகிறது.

ஆரம்பத்தில் இது சாதாரண நட்பு என்றே பலரும் நினைத்தனர். ஆனால் அதன்பிறகு சமூக வலைதளங்களில் வெளியான சில புகைப்படங்கள் ரசிகர்களையே குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளன. ஒரே இடத்தில் எடுத்த புகைப்படங்கள், ஒரே மாதிரியான பின்னணிகள், ஒரே நாளில் பதிவிடப்பட்ட மர்மமான பதிவுகள் என இருவரின் சமூக வலைதள செயல்பாடுகளும் பலரது கவனத்தை ஈர்த்துள்ளன.

அதிலும் குறிப்பாக, மற்றொரு சேனலில் நடித்து வரும் நடிகையுடன் அந்த சின்னத்திரை நடிகை பகிர்ந்து கொண்ட புகைப்படங்கள்தான் அதிகம் பேசப்பட்டு வருகிறதாம். இருவரும் ஒன்றாக சுற்றுலா சென்றதாக நேரடியாக எங்கும் குறிப்பிடவில்லை. ஆனால் ஒரே இடத்தில் எடுத்தது போல தோன்றும் புகைப்படங்கள், ஒரே மாதிரியான உடைகள், இதயம், முடிவில்லா பந்தம், ஆன்மா, நம்பிக்கை போன்ற வார்த்தைகளுடன் பதிவிடப்பட்ட ஸ்டேட்டஸ்கள் ஆகியவை ரசிகர்களுக்கே சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளன.

TV Actress Finally Searches for a Life Partner Amid Rumours of a Close Bond with Co-Star

நட்பை மீறிய உறவு: ஒரு கட்டத்தில், "இவர்கள் வெறும் நண்பர்களா? இல்லை அதையும் தாண்டிய உறவா?" என்ற கேள்விகள் ரசிகர் பக்கங்களிலேயே எழத் தொடங்கியதாக கூறப்படுகிறது. இருவரும் ஒருவரின் பதிவுகளுக்கு மற்றொருவர் தொடர்ந்து கருத்து தெரிவிப்பதும், சிறிய சாதனைகளைக் கூட மிகவும் உணர்ச்சிகரமாக கொண்டாடுவதும் இந்த சந்தேகங்களை மேலும் அதிகரித்ததாக சொல்லப்படுகிறது.

பரவும் தகவல்: இப்படி இருக்கையில், இந்த நெருக்கம் நடிகையின் குடும்பத்தினருக்கு பிடிக்கவில்லை என்றும் ஒரு தகவல் பரவி வருகிறது. ஆரம்பத்தில் சாதாரண நட்பு என்று நினைத்த குடும்பத்தினர், காலப்போக்கில் இருவரின் நெருக்கத்தை கவனித்ததாகவும், பின்னர் இதுகுறித்து நடிகையிடம் நேரடியாக பேசியதாகவும் கூறப்படுகிறது. இதன் பின்னர்தான் குடும்பத்தில் சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதாகவும், நடிகையின் எதிர்காலம் குறித்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கவலை தெரிவித்ததாகவும் சின்னத்திரை வட்டாரங்களில் பேசப்படுகிறது. குறிப்பாக திருமணம் மற்றும் குடும்ப வாழ்க்கை தொடர்பாக குடும்பத்தினர் தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில், நடிகை தனது விருப்பத்தில் உறுதியாக இருந்ததாகவும் கூறப்படுகிறது.

கை மீறிய நிலை: ஆனால் சமீபத்தில் நிலைமை மாறியிருக்கிறதாம். குடும்பத்தினரின் விருப்பத்தையும், எதிர்காலத்தைப் பற்றிய அவர்களது கவலையையும் கருத்தில் கொண்டு நடிகை தற்போது வாழ்க்கைத் துணையை தேடும் முயற்சியில் இறங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மூலமாக சில வரன்கள் பார்க்கப்பட்டு வருவதாகவும், அதில் ஒருவரிடம் நடிகைக்கு நல்ல அபிப்ராயம் உருவாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் நீண்ட காலமாக பேசப்பட்டு வந்த அந்த மர்மமான உறவு எந்த திசையில் செல்லப் போகிறது என்ற கேள்வி தற்போது சின்னத்திரை வட்டாரங்களில் எழுந்துள்ளது. ஒருபுறம் சமூக வலைதளங்களில் தொடர்ந்து நெருக்கமான புகைப்படங்கள் பகிரப்பட்டு கொண்டிருக்க, மறுபுறம் குடும்பத்தினரின் அழுத்தத்தால் நடிகை வாழ்க்கையில் புதிய முடிவை நோக்கி நகர்கிறார் என்ற பேச்சும் பரவி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X