கணவரை கழட்டிவிட்டுட்டு கள்ளக் காதலுடன் ஓடிய நடிகை.. பெருசா செட்டில் ஆக இப்படியா?

By Staff

ஹைதராபாத்: தெலுங்கு டிவி சீரியல் நடிகை ஒருவர் கணவரை கழட்டிவிட்டு விட்டு கள்ளக் காதலுடன் எஸ்கேப் ஆகிவிட்டதாக கிசுகிசுக்கள் கிளம்பியுள்ளன. கடந்த சில மாதங்களாகவே கணவரிடம் பேச்சுவார்த்தை இல்லாமல் சண்டைப் போட்டு பிரிந்து வாழ்ந்து வந்தார் அந்த நடிகை என்றும் தற்போது கணவரை மொத்தமாக விட்டுவிட்டு காதலனுடன் கம்பி நீட்டி விட்டார் என்றும் கூறுகின்றனர்.

பார்க்க பப்ளி இருக்கும் அந்த சின்னத்திரை நடிகைக்கு டோலிவுட் சீரியல் பிரியர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. ஆனால், திடீரென யாரிடமும் எதுவும் சொல்லிக் கொள்ளாமல் அப்ஸ்காண்ட் ஆகிவிட்டார் என பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.

TV Actress leave her husband and escaped with illegal boy friend

சீரியலில் தொடர்ந்து அவர் நடிப்பாரா? என்கிற கேள்வி எழுந்த நிலையில், டைரக்டர் போன் பண்ணியும் நடிகை எடுக்காத நிலையில், அவரது குடும்ப பிரச்சனைகள் கொஞ்சம் கொஞ்சமாக வெளியே கசியத் தொடங்கியிருப்பதாக கூறுகின்றனர்.

வசதியான காதலன்: சீரியலில் நடிகை நடித்து சம்பாதிப்பது தான் வீட்டின் வருமானம் என்றும் கணவர் சாதாரண அரசு வேலை பார்த்து வரும் நிலையில், குறைந்த ஊதியமே சம்பாதித்து வருவதால், மனைவி அவரை பெரிதாக மதிப்பதே கிடையாது என்கின்றனர். ஆடம்பரமாக வாழ வேண்டும் என்பதற்காக ரகசியமாக வசதியான காதலனுடன் அடிக்கடி பார்ட்டிக்கு செல்வது, டேட்டிங்கிற்கு செல்வது என காதலனின் காசுல மஞ்சக் குளித்து வந்திருக்கிறாராம் அந்த நடிகை.

கணவருடன் சண்டை: ஆரம்பத்தில் இருந்தே கணவர் அந்த நபரை பற்றிக் கேட்கும் போதெல்லம, ஃபிரெண்ட் என்றும் உனக்கு என்ன பிரச்சனை? சந்தேகப்படுறியான்னு கேட்டு சண்டை போட்டிருக்கிறார். சமீபத்தில், 2 நாட்கள் அவுட்டோர் ஷூட்டிங் வீட்டுக்கு வரமாட்டேன் என சொல்லிவிட்டு கள்ளக்காதலன் உடன் ரெசார்ட் ஒன்றில் கும்மாளம் போட்டுள்ளார். ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு சந்தேகத்துடன் சென்ற கணவனுக்கு அவருடைய போர்ஷன் அடுத்த மாதம் தான் இப்போதைக்கு அவருக்கு சீனே இல்லை என சொல்ல, கணவன் ஷாக் ஆகிவிட்டாராம். திரும்பி வந்த மனைவியிடம் இதுகுறித்து கேட்க சண்டைப் போட்ட மனைவி தனது தோழி வீட்டுக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றுவிட்டாராம்.

ஆளே எஸ்கேப்: அந்த சீரியலில் லீடு ஹீரோவின் தங்கை கதாபாத்திரத்தில் நடித்து வந்த நடிகை தற்போது ஆளே எஸ்கேப் என்கின்றனர். காதலனின் சொந்த ஊரான மங்களூருக்கு கிளம்பிப் போய்விட்டார் என தகவல்கள் கசிந்துள்ளன. கணவர் ஒரு பக்கம் கலங்கிப் போய் நிற்க டிவி யூனிட்டும் இவருக்கு பதில் இவர் என போடும் நிலை வந்துவிடுமா? என்றும் தங்கை கேரக்டருக்கு வேறு ஆளை பார்க்கவும் முடிவு செய்து தேடி வருவதாகவும் கூறுகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X