இதுக்கு மேல குழந்தை பிறக்கும்னு நம்பிக்கை இல்லை.. கணவரை கழட்டி விட முடிவு செய்த டிவி நடிகை?
சென்னை: பிரபல தனியார் தொலைக்காட்சியில் ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்று வரும் டிவி நடிகை தனது கணவரை விரைவில் பிரியப்போவதாகவும் கடந்த சில மாதங்களாகவே அவருடன் பேச்சு வார்த்தையில் இல்லை என்றும் ஷாக்கிங் தகவல்கள் கசிந்துள்ளன.
ஆசை ஆசையாய் காதலித்து திருமணம் செய்துக் கொண்டாலும் குழந்தை பாக்கியம் கிடைக்கவில்லை என்றால் ஒரு சில ஆண்டுகள் பெரிதாக சினிமா பிரபலங்கள் அதை பொருட்படுத்தாமல் விட்டு விடுவார்கள். சிலர், குழந்தை பிறக்க மருத்துவ ரீதியாக என்ன என்ன பரிசோதனை செய்ய வேண்டும், என்ன என்ன சிகிச்சை செய்ய வேண்டும் என முயற்சி செய்வார்கள்.

காதலை அழிக்கும் குழந்தை மோகம்: சில தம்பதியினர் குழந்த வரம் தங்களுக்கு இல்லை என்றால் தத்தெடுத்து வளர்ப்பது, வாடகைத் தாயை பயன்படுத்துவது என சினிமாவில் வெவ்வேறு விதமாக காதல் தான் முக்கியம் குழந்தை எல்லாம் எப்படி வேண்டுமானால் அடைந்து விடலாம் என நினைத்து வாழ்ந்து வருகின்றனர். ஆனால், ஒரு சில ஜோடிக்கள் காதலை விட குழந்தை பேறு இல்லை என்பதால் ஒரு கட்டத்துக்கு மேல் சின்ன சின்ன சண்டையில் ஆரம்பித்து சில வருடங்களில் விவாகரத்து வாங்கிக் கொண்டு பிரிந்து விடும் நிகழ்வுகளும் சமீப காலமாக சர்வ சாதாரணமாகி வருகின்றன.
காதல் திருமணம்: அந்த டிவி நடிகையும் அப்படித்தான் காதலித்து திருமணம் செய்துக் கொண்ட நபருடன் இத்தனை ஆண்டுகள் குழந்தை இல்லை என்றாலும் அனைத்தையும் சகித்துக் கொண்டு வாழ்ந்து வந்தார். வெளி இடங்களுக்கு சென்றாலோ, பணிபுரியும் இடங்களுக்கு சென்றாலோ, உறவினர் வீட்டு நிகழ்ச்சிகளுக்கு சென்றாலோ புழு பூச்சி இல்லை என பேச ஆரம்பித்து மனதை புண்படுத்தி விடுகின்றனர்.
விரைவில் விவாகரத்து: தன்னிடம் எந்தவொரு பிரச்சனையும் இல்லை என்பதை டெஸ்ட் மூலம் தெரிந்து கொண்ட அந்த டிவி நடிகை கணவரிடம் தான் பிரச்சனை என்பதை புரிந்துக் கொண்டாலும் அதை எல்லாம் பெரிது படுத்தாமல் இத்தனை ஆண்டுகள் பொறுமையுடன் இருந்து வந்திருக்கிறார். ஆனால், சமீபத்தில், கணவரின் குடும்பத்தினர் டிவி நடிகையை ரொம்பவே மோசமாக பேசிய நிலையில், அதற்கு ஆதரவாக கணவர் நின்றது அந்த டிவி நடிகையை ஆத்திரத்தில் ஆழ்த்தி உள்ளது. அதன் பிறகு கணவருடன் பேசுவதை நிறுத்திய அந்த டிவி நடிகை விரைவில் கணவரை விவாகரத்து செய்யப்போவதாக அதிர்ச்சி தகவல்கள் கசிந்துள்ளன.


Click it and Unblock the Notifications











