கைவிட்ட சேனல்.. இரண்டு குழந்தைகளுடன் சாப்பாடுற்கே தவிக்கும் சீரியல் நடிகை!
சென்னை: சின்னத்திரையில் ஜோடியாக நடித்து, காதலில் விழுந்து, ஐந்து வருடங்கள் ஒரே வீட்டில் வாழ்ந்து வந்த அந்த கன்னட நடிகைக்கும், வில்லங்க நடிகருக்கும் இடையே அப்படி ஒரு காதல். நடிகை கர்ப்பமானதை அடுத்து, காஞ்சிபுரத்தில் நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில் ரகசியமாக திருமணம் செய்து கொண்டனர். ஆனால், அந்த மகிழ்ச்சி நீடிக்கவில்லை.
'செல்லமாய்' வந்த புயல்: ஆரம்பத்தில் நடிகைக்கு இருந்த மார்க்கெட் அந்த நடிகருக்கு இல்லை. ஒரு பிரம்மாண்ட சேனலில் நடிகை பிஸியாக நடித்துக் கொண்டிருக்க, நடிகரோ வாய்ப்பில்லாமல் வீட்டில் இருந்தார். பின், ஒரு முன்னணி 'நட்சத்திர' சேனலில் நடிகருக்கு ஹீரோவாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அங்குதான் கதையின் 'வில்லி' என்ட்ரி கொடுத்தார். சீரியலில் தனக்கு ஜோடியாக நடித்த அந்த 'அ' எழுத்து மலையாளி நடிகையுடன் ஹீரோ நெருக்கம் காட்ட, விஷயம் கர்ப்பிணி மனைவி நடிகைக்கு தெரிந்து பெரிய பஞ்சாயத்தானது.

அந்த அதிர்ச்சி ஆடியோ: என் புருஷனை அந்த நடிகைதான் மயக்கிட்டாங்க என மனைவி கதற, அந்த சீரியல் நடிகையோ மனைவியைக் கேவலமாக, ஆபாசமாகத் திட்டிய ஆடியோ இணையத்தில் லீக்கானது. இப்படி இருதரப்பிற்கும் இடையே பஞ்சாயத்து முற்றிவிட, ஒரு கட்டத்தில் வில்லங்க நடிகர் கர்ப்பிணி மனைவியை கை நீட்டி அடித்துவிட்டார். இதுகுறித்து கர்ப்பிணி நடிகை போலீசில் புகார் கொடுக்க, மனைவியை அடித்த வழக்கில் நடிகர் ஜெயிலுக்கும் போய் வந்தார். இப்போது கோர்ட்டில் விவாகரத்து கேஸ் நடந்து வருகிறது.
கைவிட்ட சேனல்: கணவன் மனைவி பிரச்சனை நடந்தபோது, நடிகை நடித்து வந்த மெகா சீரியல் சேனல் நிர்வாகம், நடிகைக்கு ஆதரவாக நின்றது. ஆனால், அந்த சீரியல் முடிந்து 8 மாதங்கள் ஆகியும், அந்தப் பெரிய சேனல் நடிகைக்கு அடுத்த வாய்ப்பு தரவே இல்லையாம். இரண்டு குழந்தைகளை வைத்துக் கொண்டு குடும்ப செலவுக்கு காசில்லாமல் தவித்து வரும் அந்த நடிகை, இப்போது யூடியூப் சேனல் தொடங்கி சமையல், ஆன்மீகம் என வீடியோக்கள் போட்டு எப்படியோ குடும்பத்தை ஓட்டி வருகிறார்.
மறுபக்கம், அந்த வில்லங்க நடிகர் நடித்த வந்த சீரியல் முடிந்ததும், தன் மீதான கறையைத் துடைக்க, பெரிய வீட்டுக்குள் நுழைந்தார். அங்கு போய் நல்ல பெயர் எடுக்கலாம் என அவர் போட்ட கணக்கு தப்பாய் முடிந்தது. இமேஜ் மேலும் டேமேஜ் ஆகி வெளியே வந்த நடிகருக்கு, தற்போது வரை எந்த சேனலிலும், எந்த சீரியலிலும் நடிக்க வாய்ப்பே கிடைக்கவில்லையாம்.


Click it and Unblock the Notifications