நடிகையை பாடாய் படுத்தும் வயதான நடிகர்.. ஏன் போனோம்னு இருக்குனு புலம்புறாராம் அம்மணி

By Staff

சென்னை: தமிழில் சின்னத்திரையில் நடிகையாக அறிமுகமான அந்த நடிகை இப்போது வெள்ளித்திரையில் வெற்றிக்கரமான ஹீரோயினாக வலம் வர ஆரம்பித்திருக்கிறார். இத்தனை நாட்கள் தமிழில் மட்டும் நடித்துக்கொண்டிருந்த அவர் இப்போது வேறு மொழி திரைத்துறைக்கும் சென்றிருக்கிறார். ஆனால் ஏன் இன்னொரு மொழிக்கு நடிக்க சென்றோம் என தனக்கு நெருக்கமானவர்களிடம் புலம்பி வருகிறாராம் அந்த நடிகை.

தமிழ் சின்னத்திரையில் தனது நடிப்பு பயணத்தை தொடங்கியவர் அந்த பிரமாண்ட நடிகை. சின்னத்திரையில் ஜொலித்தால் வெள்ளித்திரையிலும் கதவுகள் திறக்கும் என்ற கோலிவுட் ஃபார்முலா படி அம்மணிக்கும் கதவுகள் திறந்தன. அதன்படி அவர் நடித்த முதல் படமே சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. நடிகையின் அழகும், திறமையும் அவருக்கு பெரிய பெயரை பெற்றுக்கொடுக்க அடுத்தடுத்து வாய்ப்புகள் அவருக்கு கிடைத்தன.

ஏற்ற, இறக்கமான கரியர்: கிடைத்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக்கொண்ட அவர் தனது திறமையை நல்லபடியாகவே காண்பித்தார். அப்படி சில படங்கள் ஹிட்டடிக்க செய்தன. இதனால் உற்சாகத்தில் மிதந்த அவருக்கு அதிர்ச்சி கொடுக்கும் விதமாக அடுத்தடுத்து அம்மணி நடித்த படங்கள் தோல்வியை சந்திக்க ஆரம்பித்தன. ஆனாலும் விடாமுயற்சியோடு தொடர்ந்து முயன்றுகொண்டே இருக்கிறார் அவர்.

TV Actress Turned Film Heroine Regrets Entering Another Language Industry

ஒன்லி ஹோம்லி: நடிகையிடம் எக்கச்சக்க அழகுகள் இருந்தாலும் ஹோம்லி கேரக்டர்களுக்கே முன்னுரிமை கொடுப்பவர். தன்னை தேடி வந்த கிளாமர் ரோல்களை எல்லாம் எதை பற்றியும் யோசிக்காமல் தூக்கி தூர போட்டவர். அப்படி அவர் கிளாமர் காண்பிக்க மறுத்ததால் கூட அவருக்கு வாய்ப்புகள் எல்லாம் சரசரவென்று குறைந்துபோனது எனவும் ஒரு பேச்சு ஓடுவதும் குறிப்பிடத்தக்கது. இதனால் தமிழில் கொஞ்சம் கொஞ்சமாக கிளாமரை காண்பிக்க ஆரம்பித்திருக்கிறார்.

வேற்று மொழியில் படம்: சூழல் இப்படி இருக்க செம ஜாக்பாட்டாக பக்கத்து மாநில திரைத்துறையிலிருந்து அவருக்கு வாய்ப்பு சமீபத்தில் கிடைத்தது. இதனால் படு சந்தோஷமாகிவிட்டார். எப்படியாவது கிடைத்திருக்கும் வாய்ப்பை பயன்படுத்தி அந்த மொழி திரைத்துறையிலும் வென்றுவிட வேண்டும் என்று முடிவெடுத்திருக்கிறார். அதேசமயம் வேற்று மொழிக்கு சென்றால் கண்டிப்பாக கிளாமர் ரோல்கள் செய்ய சொல்வார்கள் என்பதை தெரிந்துகொண்டு அதற்கான முன் ஏற்பாடுகளுடன் சென்றாராம்.

டார்ச்சர் செய்யும் நடிகர்: அப்படி அவர் வயதான நடிகர் ஒருவருக்கு ஜோடியாகியிருக்கிறார். அந்த நடிகரின் படங்களில் நடித்தால் கண்டிப்பாக கிளாமரை காட்டித்தான் ஆக வேண்டும் என்ற் எழுதப்படாத விதி இருக்கிறது. அதுமட்டுமின்றி ஏற்கனவே அந்த நடிகர் பெண்கள் விஷயத்தில் வீக் என்று அரசல் புரசலாக பேச்சு ஓடும் சூழலில்; இந்த நடிகயை பார்த்து மயங்கிவிட்டாராம். மேலும் அவரை எப்படியாவது மயக்கிவிட வேண்டும் என்றும் திட்டம் தீட்டியிருக்கிறாரம். எனவே படத்தின் இயக்குநரிடம் நடிகைக்கு வைத்திருக்கும் கிளாமர் சீன்களை எல்லாம் இன்னும் கொஞ்சம் அதிகரிக்க வேண்டும் என்று சீக்ரெட் கட்டளையிட இயக்குநரும் அப்படியே செய்துவிட்டாராம். முக்கியமாக ஷூட்டிங் ஸ்பாட்டில் சதா நேரமும் நடிகையின் அருகிலேயே அமர்ந்து அவரை இம்ப்ரெஸ் செய்வதற்கு பல வேலைகளை செய்துவருகிறாராம். இதையெல்லாம் தாங்கிக்கொள்ள முடியாத அம்மணி ஏன் டா அந்த மொழி படத்துக்கு நடிக்க போனோம்னு இருக்கு என்று தனக்கு நெருக்கமானவர்களிடம் புலம்புகிறாராம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X