2வது திருமணம் செய்தும் அடங்காத டிவி நடிகை.. அரசியல் புள்ளியுடன் கூடா நட்பு.. எங்கே போய் முடியப்போகுதோ!

By Staff

சென்னை: முதல் திருமணம் சரியாக அமையவில்லை என சொல்லிவிட்டு 2வது திருமணம் செய்துக் கொண்ட டிவி நடிகை தனது 2வது கணவருக்கும் டிமிக்கி கொடுத்துவிட்டு அரசியல் புள்ளி ஒருவருடன் சுமார் ஒரு வாரம் டூர் சென்றது தான் சின்னத்திரையுலகில் பரபரப்பை கிளப்பியுள்ளதாக கூறுகின்றனர்.

சினிமா நடிகைகளை ஓவர்டேக் செய்யும் விதமாக சில சீரியல் நடிகைகள் ஒன்றுக்கு மேற்பட்ட திருமணங்களை செய்து வருகின்றனர். அது அவர்களுடைய தனிப்பட்ட விஷயம் என்றாலும் அதனால் குழந்தைகள் மற்றும் சம்பந்தப்பட்ட குடும்பத்தினர் பெரிதும் பாதிக்கப்பட்டு வருவதாக கூறுகின்றனர்.

Tv Actress who done second marriage went goa tour with politician shocks colleagues

திருமணமாகி சில மாதங்கள் கூட சேர்ந்து வாழாமல் இருப்பதற்கு காதலித்து திருமணம் செய்துக் கொண்டோம் என்றும் எங்களை போல ஜோடியே இருக்காது என்றும் எனக்கு கிடைத்தவர் அப்படிப்பட்ட சொக்கத் தங்கம் என மீடியா வெளிச்சத்துக்காக பல டிராமக்களை போட்டு விட்டு உடனடியாக அந்த நபரை கழட்டிவிட்டு அடுத்த நபரை தேடிச் செல்கிறார்கள் என்கிற குற்றச்சாட்டுகள் எழுந்தாலும், தனிப்பட்ட வாழ்க்கையில் அவர்கள் அனுபவிக்கும் வலிகள் அவர்களுக்கு மட்டுமே தெரியும் என நெருங்கியவர்கள் முட்டுக் கொடுத்து வருகின்றனர்.

சீக்கிரம் சம்பாதிக்க வேண்டும்: பல நடிகைகள் கஷ்டப்பட்டு கடுமையாக உழைத்து பல தொடர்களில் நடித்து சம்பாதித்து வரும் நிலையில், ஒரு சில டிவி நடிகைகள் ஒன்றுமே செய்யாமல் வெறும் வாயாலே வடை சுட்டு சீக்கிரம் சம்பாதித்து விட வேண்டும் என்பதற்காக பல தவறான வழிகளில் செல்வதால் தான் மற்றவர்களுக்கும் கெட்டப் பெயர் உண்டாகிறது என சில பெண் பிரபலங்களே அந்த டிவி நடிகையை வெளுத்து வாங்கி வருகின்றனர்.

2வது திருமணம் செய்தும்: முதல் கணவருடன் வாழ்க்கை சரிப்பட்டு வரவில்லை என்று அவரை ஒதுக்கிவிட்டு 2வதாக ஒருவரை திருமணம் செய்துக் கொண்ட அந்த டிவி நடிகை அவருடனும் சேர்ந்து வாழாமல் அவரையும் ஏமாற்றி வருவது தான் பெரும் பிரச்சனையை கிளப்பியுள்ளதாக கூறுகின்றனர்.

அரசியல் புள்ளி: முதல் கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில், டிவியிலும் சரியாக சம்பளம் கிடைக்காத நிலையில், அரசியல் பிரபலத்துடன் அந்த நடிகைக்கு இருந்த கூடா நட்பு அவர் 2வது திருமணம் செய்த பிறகும் தொடர்வதாகவும் கடந்த வாரம் பார்ட்டி ஒன்றுக்காக கோவா சென்ற அந்த அரசியல் புள்ளி 2வதாக திருமணமான டிவி நடிகையையும் 4 நாட்கள் டூர் அடித்துவிட்டு வந்ததாக பகீர் தகவல்கள் வெளியாகி உள்ளன. கணவரிடம் வேலை விஷயமாக செல்ல வேண்டும் என சொல்லிவிட்டு அந்த டிவி நடிகை ஏமாற்றியுள்ளார் என்றும் கிசுகிசுக்கள் கிளம்பி உள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X