குடும்பத்திற்கே துபாய் டிக்கெட்.. அடாவடி செய்த டிவி பிரபலம்..இன்னும் வளரவே இல்ல அதுக்குள்ள இப்படியா?

By Staff

சென்னை: ஒரு பிரபலமான தொலைக்காட்சியில் அறிமுகமான அந்த கீச் குரல் பாடகி, ஒரு சில படத்தில் நடித்து விட்டு, ஹாலிவுட் டாப் நடிகை போல ஓவர் பில்டப் போட்டு சீன் போட்டுவருவதாக கூறப்படுகிறது. இன்னும் வளரவே இல்ல அதற்குள் இப்படி சீன் போட்டா உடம்புக்கு ஆகாதுடா சாமி என இணைய வாசிகள் அவரை விமர்சித்து கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

பிரபல தொலைக்காட்சி ஒன்று பலவிதமான சீரியல்கள், கேம் ஷோ, பாட்டு நிகழ்ச்சி, காமெடி நிகழ்ச்சி என அனைத்தையும் பிரம்மாண்டமாக நடித்தி பெரிய அளவில் பணத்தை சம்பாதித்து வருகிறது. இந்த டிவியில் ஒரு முறை முகத்தை காட்டிவிட்டால், போதும், இனி லைப் டைம் செட்டில்மெண்ட் என இந்த டிவிக்கு நுழைந்துவிட பலர் தவம் கிடைக்கின்றனர். இதற்கு ஏற்ற போல, இந்த தொலைக்காட்சியில் இருந்த வந்தவர்கள் இன்னைக்கு தமிழ் சினிமாவில் டாப் நடிகர்களாக இருக்கிறார்கள்.

Gossip Television

பிரபல தனியார் சேனல்: சினிமாவிற்கும் இந்த தொலைக்காட்சிக்கும் அப்படி ஒரு பந்தம் இருப்பதால், அந்த சேனலுக்கு என்று தனி ரசிகர் கூட்டம் உண்டு. அந்த சேனலில் வரும் தொகுப்பாளர், நடிகர்கள், பாடகர்களை பாரபட்சமே பார்க்காமல் இந்த தொலைக்கட்சி வளர்ந்துவிட்டு, அவர்களை பிரபலமாக்கி அவர்களை வைத்தே பெரிய பெரிய நிகழ்ச்சிகளை வைத்த பணத்தை சம்பாதித்து வருகிறது. அப்படி இந்த சேனல் பணத்தை சம்பாதித்தாலும், தன்னால் வளர்ந்தவர்கள் தானே என்று நினைக்காமல் அவர்களுக்கான சம்பளத்தையும் வாரி வாரி கொடுத்து வருகிறது. இதுவரை எந்த தொலைக்காட்சியும் கொடுக்காத சம்பளத்தை இந்த சேனல் தருவதால், இந்த சேனலேயே நம்பிக்கும் சிலர் நன்றி உணர்வேடு இருப்பது மட்டுமில்லாமல் கார், பங்களா என சீரும் சிறப்புமாக இருக்கிறார்கள்.

குடும்பத்திற்கே டிக்கெட்: இந்த சேனல் மூலம் பிரபலமானவர் தான் கீச் குரல் பாடகி, இவர் பேசும் போதுதான் ஏதோ குழந்தை பேசுவது போல கீச் கீச் என்று இருக்கும். ஆனால், அவர் வாய் திறந்து பாடினால் நாள் முழுக்க கேட்டுக்கொண்டே இருக்கலாம், அப்படி பிரபலமான இவரை தனியார் நிறுவனம் ஒன்று, துபாயில் நடக்கும் நிகழ்ச்சிக்காக பரிந்துரை செய்திருந்தது. முதலில் நிகழ்ச்சிக்கு ஒகே சொன்ன அந்த கீச் பாடகி, பிறகு குடும்பத்திற்கே டிக்கெட் போட்டு துபாய் அழைத்து சென்றால் தான், நான் வருவேன் என்று அடாவடி செய்துள்ளார்.

இந்த நிகழ்ச்சிக்கான பத்திரிக்கை அடித்து அதில் அவரின் பெயரை போட்டுவிட்டதால்,அந்த தனியார் நிறுவனம் வேறு வழியில்லாமல் மொத்த குடும்பத்திற்கும் துபாய்க்கு டிக்கெட் போட்டு அழைத்து சென்றுள்ளனர். இதனால், கடுப்பான அந்த நிறுவனம் இவர் இன்னும் வளரவே இல்லை அதற்குள் இப்படியா என கேட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X