பின்வாங்கியது ஆளும் தரப்பு டிவி.. நைஃப்புக்கு தொடரும் நெருக்கடி
அடுத்த உச்சம் என சொல்லிக் கொள்ளும் நடிகரின் புதுப் படத்தை ஆளும் கட்சிக்குச் சொந்தமான டிவி வாங்கிவிட்டதாக தகவல் வெளியானதல்லவா..
இந்த தகவல் பரவியதால் படத்துக்கும் அதன் தயாரிப்பாளர்களுக்கும் பெரிய பாதுகாப்பு கிடைத்தது போன்ற நிலை. போராட்டக்காரர்கள் தங்கள் எதிர்ப்பில் தொடர்ந்து உறுதியாக இருந்தாலும், அம்மா டிவி ஆச்சே என்ற சின்ன தயக்கம் இருந்து வருகிறது.
இந்த நிலையில் படத்தை வாங்கும் முடிவிலிருந்து பின்வாங்கியுள்ளதாம் டிவி தரப்பு.
தமிழுணர்வாளர்களின் மொத்த எதிர்ப்பையும் எதற்காக சம்பாதித்துக் கொள்ள வேண்டும் என யோசிக்கும் டிவி நிர்வாகம், கொஞ்ச நாள் பொறுத்திருங்கள் என தயாரிப்பு தரப்புக்குச் சொல்லிவிட்டதாம்.
Comments


Click it and Unblock the Notifications