»   »  அடடே அப்படியா? குல தெய்வம் கும்பிட போய் குடும்பத்துக்குள் புகைச்சலாமே?

அடடே அப்படியா? குல தெய்வம் கும்பிட போய் குடும்பத்துக்குள் புகைச்சலாமே?

Posted By:
Subscribe to Oneindia Tamil

குலதெய்வத்தை கும்பிட்டால் குழப்பம் தீரும் என்பார்கள். இங்கே குலதெய்வத்தால் ஒரு குடும்பத்தில் குழப்பம் கும்மியடிக்க ஆரம்பித்துள்ளதாம்.
அந்த கதையைத்தான் இப்போது சின்னத்திரை வட்டாரங்களில் கிசுகிசுக்கின்றனர்.

மெட்டி ஒலிக்க சீரியல் எடுத்து புகழடைந்தவர் இந்த இயக்குநர். சீரியல் மூலம் உச்சநிலைக்கு செல்ல சினிமா இயக்குநராகவும் ஆனார் முதல் படம் ஓடியது போல இரண்டாவது படம் ஓடவில்லை. அதனால் சீரியலே போதும் என்று சொந்த தயாரிப்பில் மங்களகரமான பெயரில் மீண்டும் சூரிய சேனலில் நுழைந்தார்.

அந்த சீரியலும் ஆயிரம் எபிசோடுகளுக்கு மேல் ஓடியது. இயக்குநருக்கும் சேனலில் நல்ல பெயரை வாங்கித்தந்தது. தொடரின் நாயகி சினிமாவில் நடித்து சீரியலுக்கு வந்தவர் என்பதால் ரசிகர்களுக்கும் அறிமுகமானவர். மலராக மலர்ந்தவர் இயக்குநரின் அடுத்த சீரியலிலும் நாயகியாகவே நடித்து வருகிறார்.

இங்குதான் டுவிஸ்ட் குடும்ப சாமியை கும்பிடும் இந்த சீரியலில் இயக்குநர் ஹீரோவாக நடிக்கவில்லை. அது மட்டுமல்ல ஹீரோயினுக்கும் ஜோடி போடவில்லை. இப்போது இயக்குநருக்கும், ஹீரோயினுக்கும் இடையே பத்திக்கிச்சாம் இது இயக்குநரின் வீட்டில் புகைச்சலை ஏற்படுத்தி அவரது மனைவி வில்லி அவதாரம் எடுத்துள்ளாராம்.

முருகனான பெயரைக் கொண்ட இயக்குநருக்கு இப்படி ஒரு சிக்கலா என்று கேட்கின்றனர் சின்னத்திரை வட்டாரங்களில். எப்படியோ சீரியல் கதை சுபமானல் சரிதான்.

English summary
here is the some tv serial gossips. A serial heroine affection to director.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil