»   »  கரும்பு மெஷினில் கையை விட்டு மாட்டி முழிக்கும் ஹீரோ!

கரும்பு மெஷினில் கையை விட்டு மாட்டி முழிக்கும் ஹீரோ!

Posted By:
Subscribe to Oneindia Tamil

டிவியில் இருந்து சினிமாவுக்கு வந்து மிக வேகமாக வளர்ந்து விட்ட அந்த சினா கானா ஹீரோ ஆளுங்கட்சி பிடியில் சிக்கி தவியாய் தவிக்கிறாராம். இத்தனைக்கும் இந்த சிக்கல் ஹீரோவாக இழுத்துக்கொண்டது தான்.

TV hero in big upset

ஹீரோவுக்கு எதிராக திரண்ட மூன்று தயாரிப்பாளர்கள் பழைய ஒப்பந்தப்படி கால்ஷீட் கேட்டதால் ஹீரோவுக்கும் அவர்களுக்குமான பஞ்சாயத்து நீண்டது. ஒரு கட்டத்தில் ஆளுங்கட்சியை சரண்டர் ஆகி பஞ்சாயத்தை முடித்தார் ஹீரோ. அதன் பின்னர் தான் ஹீரோவுக்கு ஒரிஜினல் சிக்கலே தொடங்கியது. அடுத்தடுத்த படங்களுக்கு கால்ஷீட்டை தங்கள் நிறுவனத்துக்கு 'அன்பாக' கேட்டு வாங்கிய மேலிடம் சமீபத்தில் அவர் நடித்து வெளியான இரண்டெழுத்து படத்தை தியேட்டரில் ஓடிக்கொண்டிருக்கும்போதே டிவியில் ஒளிபரப்பி விட்டது. இதில் ஹீரோ கடும் அப்செட்டாம். அடுத்த படம் வெளியாக இன்னும் பத்து மாதங்கள் இருக்கு. நம்மளை மக்கள் மறந்துடுவாங்களே என்ற பயம் இன்னொரு பக்கம்.

நூறாவது நாள் கொண்டாடிக்கொண்டிருக்கும்போதே டிவியில் போட்டால் யாருக்கு தான் கடுப்பு வராது? 'பட் இட்ஸ் ஜஸ்ட் எ பிகின்னிங் தம்பி.. நாட்டாமை படத்துக்கு என்ன நடந்தது தெரியுமா?' என்று சிரிக்கிறது கோலிவுட் வட்டாரம்.

Read more about: gossip, கிசுகிசு
English summary
TV hero has upset after ruling party TV telecast his two letters movie on Pongal day.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil