»   »  சேட்டனுக்கு அதிக முக்கியத்துவம்… மெகா படத்தினால் மன வருத்தத்தில் டிவி ஹீரோ!

சேட்டனுக்கு அதிக முக்கியத்துவம்… மெகா படத்தினால் மன வருத்தத்தில் டிவி ஹீரோ!

Posted By:
Subscribe to Oneindia Tamil

மிக வேகமாக வளர்ந்து விட்ட அந்த டிவி ஹீரோ நடிக்கும் அடுத்த படம் வாரிசு இயக்குநர் இயக்கத்தில் பெரிய நம்பர் ஜோடியாக வளர்ந்து வருகிறது. இந்த படத்தில் வில்லனாக மலையாளத்தில் பெரிய ஹீரோவான சேட்டன் நடித்து வருகிறார்.

வாரிசு இயக்குநரின் முந்தைய படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. அதில் ஹீரோவை விட வில்லனாக நடித்த ஹேண்ட்சம் நடிகருக்குத்தான் அதிக முக்கியத்துவம் தரப்பட்டது. அதேபோல் இந்த படத்திலும் ஹீரோவை விட அந்த மலையாள வில்லனுக்குதான் ஸ்கோப் அதிகமாம். கதை கேட்டபோது ஓகே சொன்ன ஹீரோ இப்போது யோசிக்கிறாராம்.

ஹீரோவுக்கு காமெடியை தவிர ஆக்‌ஷன், எமோஷனல் போன்றவை செட்டே ஆகாது. அதிலும் நடிப்பில் இன்னும் பூஜ்ஜிய லெவலில்தான் இருக்கிறார். எனவே பப்ளிசிட்டிக்கு மட்டும் தன்னை பயன்படுத்தி விடுவார்களோ என்ற பயம் வந்துவிட்டதாம் ஹீரோவுக்கு.

தயாரிப்பாள நண்பரும் ஸ்க்ரிப்ட்தான் முக்கியம், மாற்ற வேண்டாம் என்று அட்வைஸ் செய்வதால் குழப்பத்தில் இருக்கிறார் சினா கானா.

Read more about: gossip, கிசுகிசு
English summary
TV hero has disappointed with his director due to the importance given to the villain role in his next movie.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil