»   »  லோ பட்ஜெட் இயக்குநர்ன்னா இளக்காரமா?

லோ பட்ஜெட் இயக்குநர்ன்னா இளக்காரமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சிவ நடிகரின் படம் தள்ளிப்போனதால் அவரது பினாமி என சொல்லப்படும் அந்த படத்தின் தயாரிப்பாளர் கடும் கடன் நெருக்கடியில் மாட்டி தவிக்கிறாராம். அடுத்து எடுத்துக்கொண்டிருக்கும் படத்தின் படப்பிடிப்புக்கே பணம் புரட்ட முடியாமல் தவிக்கிறாராம்.

சிவ நடிகரின் ஸ்பீட் க்ரோயிங் காரணமாக அந்த குதிரையின் மீது பணம் கட்ட ஏராளமானோர் தயாரானார்கள். அவர்களில் சிலரை நம்பி நடிகரின் மேனேஜரே நடிகருக்கு பினாமி தயாரிப்பாளரானார். இப்போது உருவாகிக்கொண்டிருக்கும் மெகா புராஜக்ட் படம் கடந்த மாதமே ரிலீஸ் ஆகியிருக்க வேண்டியது. ஆனால் சரியான தேதி கிடைக்காததால் அதாவது போட்டிக்கு பெரிய படமே இல்லாமல் இருந்தால்தான் கல்லா கட்ட முடியும் என்று தள்ளி வைத்து விட்டார்கள். விளைவு படத்திற்காக பணம் கொடுத்த ஃபைனான்ஸ்காரர்கள் நெருக்குகிறார்களாம். வட்டியே அசலை விழுங்கும் அளவுக்கு சேர்ந்திருக்கிறது.

இதனால் மூன்றாவது முறையாக இணைந்து படம் எடுத்துவரும் லோ பட்ஜெட் இயக்குநர் படம் பிரச்னைக்குள்ளாகிறதாம். லைட்மேனுக்கு கூட பேட்டா தர முடியாமல் தவிக்கிறாராம் தயாரிப்பாளர்.

Read more about: gossip கிசுகிசு
English summary
That TV hero's benami producer in trouble due to his mega film by film postponed.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil