»   »  போஸ்டர் காப்பி சர்ச்சை...இயக்குநர் மீது கடும் கோபத்தில் ஹீரோ, தயாரிப்பாளர்

போஸ்டர் காப்பி சர்ச்சை...இயக்குநர் மீது கடும் கோபத்தில் ஹீரோ, தயாரிப்பாளர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

தான் பெரிதும் எதிர்பார்த்திருக்கும் படத்தின் போஸ்டர் வெளியிட்ட உடனேயே காப்பி என்று கண்டுபிடிக்கப்பட்டதால் கடும் மன அதிருப்தியில் இருக்கிறார்களாம் அந்த பட தயாரிப்பாளரும் ஹீரோவும்.

டிவியில் இருந்து சினிமாவுக்கு வந்த ஹீரோ தனது சொந்த தயாரிப்பில் மேனேஜரை பினாமியாக்கி ஒரு பிரம்மாண்ட படத்தில் நடித்து வருகிறார். காஸ்டிங், கதை, செட் என்று அனைத்திலும் பெரிய அளவில் செலவு செய்திருக்கும் ஹீரோவும் தயாரிப்பாளரும் அந்த படத்தை இன்னும் பெரிய தொகைக்கு விற்றுவிடத் திட்டமிட்டிருக்கிறார்கள்.

TV hero unhappy with his director

இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் வெளியிடப்பட்ட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் காப்பி என்று உடனேயே சமூக வலைதளங்களில் ஆதாரத்துடன் கழுவி ஊற்றப்பட்டது. இது இருவரையும் அதிருப்தியாக்கி இருக்கிறது.

ஏற்கனவே தாங்கள் அறிவித்திருக்கும் தேதியில் முருக இயக்குநரின் பிரம்மாண்ட படம் வெளியாகப் போவதாக அறிவிப்பு வந்திருக்கிறது. அந்த படம் தங்கள் படத்தை பாதிக்குமோ... தேதியை மாற்றலாமா என்று யோசித்துக்கொண்டிருக்கும்போதே இப்படி ஒரு கெட்ட பெயர் வந்துவிட்டதே என்று கவலையில் இருக்கிறார்களாம். கவலை, இயக்குநர் மீது கோபமாக மாறியிருக்கிறது என்கிறார்கள்.

முருக இயக்குநர் வெளியிட்ட ஃபர்ஸ்ட் லுக் இணைய ரசிகர்களிடத்தில் நல்ல வரவேற்பு பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

Read more about: gossip, கிசுகிசு
English summary
TV hero and his upcoming film producer are unhappy with their director for the poster plagiarism controversy.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil