சர்ச்சை படத்தில் நடித்ததால் பிரச்சினை.. நடிகையை தூக்க சேனல் முடிவு?
டிவி நிகழ்ச்சியில் இருந்து நடிகை தூக்கப்படலாம் எனத் தெரிகிறது.
Recommended Video

சென்னை : சர்ச்சை படத்தில் நடித்ததால் வாரிசு நடிகையை தங்களது நிகழ்ச்சியில் இருந்து தூக்கிவிடலாமா என சம்பந்தப்பட்ட தொலைக்காட்சி நிர்வாகம் ஆலோசித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
வெள்ளித்திரை பிரபலங்கள் சின்னத்திரையை நோக்கி படையெடுத்து வருவது சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. அந்தவகையில் இரண்டு வாரிசு நடிகைகள் எதிரெதிர் டிவிக்களில் புதிய நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகின்றனர். அவர்களில் ஒருவர் சமீபத்திய சர்ச்சை படத்தில் நெகடிவ் வேடத்தில் அபாரமாக நடித்து அப்ளாஸ் வாங்கியவர்.

ஆனால், படத்தில் அவர் நடித்திருந்தது முக்கிய பெண் தலைவரின் கதாபாத்திரத்தை பிரதிபலிப்பதாக இருப்பதாக பரவலாக பேச்சு உள்ளது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
சம்பந்தப்பட்ட தொலைக்காட்சி ஆளும் அரசுக்கு எதிராக விமர்சித்து வந்தாலும், தங்களது தலைவியை படத்தில் விமர்சித்ததை ஏற்றுக் கொள்ள இயலவில்லையாம். தொடர்ந்து அதே நடிகையை தங்களது தொலைக்காட்சி நிகழ்ச்சியை தொகுத்து வழங்க அனுமதித்தால், அது கட்சியினரிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தும் என எண்ணுகின்றனர்.
இதனால், நிகழ்ச்சியில் இருந்து அவரை தூக்கி விடலாமா என நிர்வாகம் யோசித்து வருகிறதாம்.


Click it and Unblock the Notifications











