Don't Miss!
- News
மலைபோல் நம்பினேனே.. ஆனால்? தாமரை கட்சியின் செயலால் புலம்பும் தர்மயுத்த தலைவன்
- Sports
இங்கிலாந்தை நாக் அவுட்டாக்கிய சிராஜ்.. பலமான நிலையில் இந்திய அணி.. வெற்றி வாய்ப்பு எப்படி?
- Finance
இட்லி விற்றவர் இன்று லட்சங்களில் வருமானம்.. சாதனை படைத்த தேன்மொழி..!
- Technology
முதல் மேட்-இன்-இந்தியா ஆட்டோனோமாஸ் விமானத்தை உருவாக்கி சோதனை! அதிகரிக்கும் தாக்குதல் சக்தி
- Automobiles
ஹிமாலயன் பைக்கை வாங்கும் ப்ளான் வெச்சிருக்கீங்களா? புதியதாக வந்துள்ள இந்த 2 நிறத்தேர்வுகளையும் பாருங்க!!
- Lifestyle
வார ராசிபலன் 03.06.2022-09.07.2022 - இந்த வாரம் திருமண வாழ்வில் பிரச்சனைகள் அதிகரிக்கக்கூடும்.....
- Travel
அழகும் சாகசமும் நிறைந்த சுதாகட் கோட்டையில் ட்ரெக்கிங் செய்யலாம் வாருங்கள்!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
கப்சிப்.. கழண்டு கொண்ட தோழி.. உயிரிழந்த சீரியல் நடிகை விவகாரத்தில் ஏகப்பட்ட பூகம்பங்கள் இருக்காம்!
சென்னை: ஆரம்பத்தில் சீரியல் நடிகை உயிரிழந்த உடனே அவரை போல ஒரு நடிகையை பார்த்ததே கிடையாது என அழுது புலம்பி பேட்டிக் கொடுத்து வந்த ஆருயிர் தோழியும் சக நடிகையுமான அந்த நடிகை தற்போது இந்த விவகாரத்திலேயே தலையை வைத்துக் கூட படுக்க மாட்டேன் என தெறித்து ஓடிவிட்டாராம்.
நடிகை தற்கொலை செய்து கொள்ளவில்லை என்றும் கணவர் தான் அவரது இறப்புக்கு காரணம் என்று செம போல்டாக பேசி வந்தார் அந்த சீரியல் நடிகை.
ஆனால், தற்போது விவகாரம் வேறலெவலுக்கு மாறி வரும் நிலையில், அந்த நடிகையை பற்றிய பேச்சையே எடுக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு இருப்பதாக கூறுகின்றனர்.
அருண் விஜய்யா வேண்டவே வேண்டாம்ன்னு நிறைய பேர் சொன்னாங்க.. இயக்குநர் ஏ வெங்கடேஷ் சொன்ன தகவல்!

மர்ம மரணம்
பிரபல சின்னத்திரை நடிகை உயிரிழந்த விவகாரத்தில் மர்மம் இருப்பதாக தொடர்ந்து கூறப்பட்டு வரும் நிலையில், மீண்டும் விசாரணை தீவிரமாகி உள்ளது. நடிகைக்கு ஆதரவாக பேசியவர்கள், நடிகைக்கு நெருக்கமாக இருந்தவர்கள் என பலரிடமும் விசாரணையை முடுக்கி விட போலீசார் முடிவெடுத்துள்ள நிலையில், நடிகையின் தோழி இந்த பிரச்சனையில் இருந்து எப்படிடா எஸ்கேப் ஆகப் போகிறோம் என தலையை பிய்த்துக் கொண்டு வருகிறாராம்.

ஆரம்பத்தில் சப்போர்ட்
நடிகை உயிரிழந்தவுடன் ஆளாளுக்கு பேசி தங்களது பிரபலத்தை அதிகரித்தனர். ஆனால், தற்போது நடிகை பற்றிய ஏகப்பட்ட விவகாரமான உண்மைகள் கசிந்து வரும் நிலையில், இந்த விஷயத்தில் அந்த நடிகைக்கோ அவரது குடும்பத்தாருக்கோ ஆதரவாக பேசுவது தங்களது எதிர்காலத்தை கேள்விக்குறியாக மாற்றி விடும் என ஒதுங்கி உள்ளனர். இதில், முக்கியமாக நடிகையின் தோழியும் சக நடிகையுமான அவர் போன் நம்பரையே மாற்றி விட்டதாக தகவல்கள் கசிந்துள்ளன.

அரசியல் பிரபலத்துடன் பழக்கம்
உயிரிழந்த சீரியல் நடிகைக்கு அரசியல் பிரபலத்துடன் பழக்கம், நடிகையின் நடத்தை சரியில்லை என அடுக்கடுக்கான தகவல்கள் வெளியாகி வரும் சூழ்நிலையில், தோழி நடிகையை அவரது குடும்பமே வாயை அடக்கிக் கொண்டு அமைதியாக இருக்க உத்தரவு போட்டதை தொடர்ந்து தான் இந்த பிரச்சனையில் தலையை கொடுக்காமல் அமைதி காத்து வருகிறாராம்.

பெயர் கெடும்
நடிகை உயிரிழந்த பின்னர் அவருக்கு எதிராக ஏகப்பட்ட தகவல்கள் பரவி வரும் சூழ்நிலையில், நடிகைக்கு ஆதரவாக ஏதாவது பேசினால் நம்முடைய பெயரும் தேவையில்லாமல் கெட்டுப் போய்விடும் என்பதற்காகவே இந்த விவகாரத்தில் இந்த நடிகையை போல மேலும், சில நெருங்கிய நண்பர்களும் சைலண்ட் மோடுக்கு சென்று விட்டதாக கூறப்படுகிறது.