அடக்கி வாசிக்கும் வாரிசு ஹீரோ, மறுபடியும் சேட்டை செய்யும் நடிகர்
சென்னை: ஒரு நடிகர் ரொம்பவே அடக்கி வாசிக்கிறார். ஆனால் மற்றொரு நடிகரோ பழையபடி சேட்டை செய்யத் துவங்கியுள்ளார்.
கோலிவுட்டின் பிரபலமான நடிகர்கள் இருவர் பற்றி தான் பேசப்படுகிறது. வாரிசு நடிகர் ஒருவர் பற்றி கிசுகிசு வராமல் இருந்தால் தான் அதிசயம். அந்த அளவுக்கு மனிதர் தனிப்பட்ட வாழ்க்கையில் ஜமாய்ப்பார்.

அவரை அங்கே பார்த்தோம், இங்கே பார்த்தோம், அந்த நடிகையுடன் பார்த்தோம், இந்த பெண் பிரபலத்துடன் ஹோட்டலில் பார்த்தோம் என்று அடிக்கடி ஏதாவது தகவல் வந்து கொண்டே இருக்கும். அப்படி ராஜாவாக இருந்தவர் பற்றி அண்மை காலமாக ஒரு கிசுகிசு கூட இல்லை.
ஏதோ காரணத்திற்காக அடக்கிவாசிக்கிறாராம். அவர் அடக்கி வாசிக்கவில்லை வாசிக்க வைக்கப்பட்டுள்ளார் என்றும் கூறப்படுகிறது. வாரிசு நடிகர் இப்படி இருக்க பல திறமைகளை தன்னிடம் வைத்துள்ள மற்றொரு நடிகரோ பழையபடி சேட்டை செய்கிறார்.
அந்த நடிகர் தன்னை வைத்து படம் எடுக்கும் ஒருவரை புலம்ப வைத்துள்ளாராம். அந்த படத்தில் ஒப்பந்தமானபோது நடிகரும், தயாரிப்பாளரும் சேர்ந்து பயங்கரமாக புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்தார்கள், ஒருவரையொருவர் புகழ்ந்து பேசினார்கள்.
என்ன நடந்ததோ தெரியவில்லை நடிகருக்கும், தயாரிப்பாளருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளதாம். பிரச்சனை ஏற்பட்ட கையோடு நடிகர் படப்பிடிப்புக்கு வருவது இல்லையாம். அவரை எப்படியும் சமாதானம் செய்துவிடலாம் என்ற நம்பிக்கையில் அதற்கான வேலையில் இறங்கியுள்ளாராம் தயாரிப்பாளர்.
இந்த தயாரிப்பாளர் மட்டும் அல்ல மற்றொரு பிரபலமும் நடிகரால் நிம்மதியை இழந்து புலம்பிக் கொண்டிருக்கிறார். தனக்கு நெருக்கமானவர்களிடம் புலம்பினாலும் வெளியே நான் கவலையே படவில்லையே என்று நடித்து சமாளிக்கிறாராம் அந்த பிரபலம்.


Click it and Unblock the Notifications











