நடிகருக்காக போட்டா போட்டி போடும் 2 இளம் நடிகைகள்

By Siva

சென்னை: கோலிவுட் பிரபலம் ஒருவருக்காக இரண்டு நடிகைகள் இடையே போட்டா போட்டி நடக்கிறதாம்.

பல திறமைகளை கொண்டவர் அந்த நடிகர். அவரிடம் இருக்கும் ஒரு முக்கிய திறமை கோலிவுட்டில் யாருக்குமே இல்லை என்று தைரியமாக கூறலாம். அந்த தனித்திறமையால் தான் அவரிடம் பல நடிகைகள் நெருக்கம் காட்டுகிறார்கள்.

Two actresses are in love with an actor

நடிகருக்கு திருமணம் செய்து கொள்ளும் ஐடியா இல்லை. அதனால் அவர் வாழ்வில் காதலிகள் வருவதும், போவதுமாக உள்ளனர். பெரிய இடத்து வாரிசு நடிகை முதல் தங்கச்சி நடிகை வரை பலர் நடிகருடன் நெருக்கம் காட்டியுள்ளனர்.

தற்போது இளம் நடிகை ஒருவர் நடிகருடன் ஓவர் நெருக்கமாக இருக்கிறாராம். முதலில் நட்பாக ஆரம்பித்த பழக்கம் தற்போது காதலில் சென்று முடிந்துள்ளதாம். நடிகரின் படப்பிடிப்பு எங்கு நடந்தாலும் அவருடன் கடலை போட சென்று விடுகிறாராம் நடிகை.

நடிகையின் இந்த செயல் அறிந்த அந்த நடிகரின் மற்றொரு தோழி(காதலி) கடுப்பில் உள்ளாராம். நான் இருக்கும்போது அவ என்ன எப்ப பார்த்தாலும் அவருடன் உரசிக் கொண்டே இருக்கிறாள் என்பதே அம்மணியின் கடுப்பாம்.

எத்தனை காதல் வந்தாலும் அது நீடிக்கும் வரை நீடிக்கட்டும், அத்துக் கொண்டு போனால் போகட்டும் என்ற மனநிலையில் உள்ளார் நடிகர். அப்படி இருந்தும் அவரை தேடி காதலிகள் வந்து குவிகிறார்கள்.

இதை பார்க்கும் மற்ற நடிகர்களோ மனுஷனுக்கு பெரிய மச்சம் இருக்குப்பா, இல்லை என்றால் நடிகைகள் அவரை பற்றி தெரிந்தும் அவரிடம் நெருக்கம் காட்டுவார்களா என்று கூறுகிறார்கள்.

நடிகரின் படங்களை விட அவரின் காதலிகள் பற்றி தான் அதிகம் செய்திகள் வெளியாகின்றன. மேலும் கிசுகிசுக்களுக்கு பஞ்சமே இல்லை. இது எல்லாம் தெரிந்தும் நடிகர் நமட்டு சிரிப்புடன் அவர் வேலையை மட்டும் பார்த்துக் கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X