தயாரிப்பாளர்களை கதறவிடும் 2 நடிகைகள்: அப்படி என்ன செய்கிறார்கள்?

By Siva

சென்னை: இரண்டு நடிகைகள் தயாரிப்பாளர்களை கதறவிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

அழகும், திறமையும் வாய்ந்த நடிகை அவர். அவர் எவ்வளவு சம்பளம் கேட்டாலும் கொடுக்க தயாரிப்பாளர்கள் தயாராக உள்ளனர். காரணம் அவர் மார்க்கெட் நிலவரம் அப்படி. அம்மணிக்கு சென்னையில் சொந்தமாக வீடு உள்ளது.

இந்நிலையில் தான் அவர் தயாரிப்பாளர்கள், இயக்குநர்களுக்கு ஒரு நிபந்தனை விதித்து கதறவிடுகிறார்.

சென்னை

சென்னை

சென்னையில் படப்பிடிப்பு நடந்தால் நான் நட்சத்திர ஹோட்டல்களில் தான் தங்குவேன் என்று நடிகை அடம் பிடிக்கிறாராம். இதை கேட்டு தயாரிப்பாளர்களோ, சென்னையில் சொந்தமாக வீடை வைத்துக் கொண்டு நம்ம பாக்கெட்டில் ஓட்டை போடுவதற்கென்று வந்திருக்கு இந்த பொண்ணு என்று முணுமுணுக்கிறார்களாம்.

தயாரிப்பாளர்கள்

தயாரிப்பாளர்கள்

அம்மணி ஸ்டார் ஹோட்டல்களில் தங்குவதால் தயாரிப்பாளர்களுக்கு கூடுதல் செலவு ஏற்படுகிறது. தனது சம்பளத்தை தனியாக மொத்தமாக வாங்கிக் கொள்கிறார் அவர். சம்பளத்தையும் வாங்கிவிட்டு ஹோட்டல் பில்லையும் நம் தலையில் கட்டுகிறாரே என்பது தான் தயாரிப்பாளர்களின் புலம்பல். நடிகை சொந்த வீட்டில் தங்காமல் ஸ்டார் ஹோட்டல்களில் அதுவும் தயாரிப்பாளர்கள் காசில் தங்குவதை பார்த்து அவர் ரொம்ப அல்பையாக இருப்பதாக விமர்சனம் எழுந்துள்ளது.

நிபந்தனை

நிபந்தனை

இந்த நடிகை தான் இப்படி என்றால் மார்க்கெட் நிலவரம் சரியில்லாத மற்றொரு நடிகையும் ரொம்பவே சேட்டை செய்கிறாராம். அவரும் சென்னையில் வீடு இருக்க படப்பிடிப்பின்போது ஸ்டார் ஹோட்டலில் தான் தங்குவேன் என்று அடம்பிடிக்கிறாராம். அவருக்கு மார்க்கெட் இல்லை என்று தெரிந்தும் அவரை புக் செய்த தயாரிப்பாளர் தற்போது புலம்பிக் கொண்டிருக்கிறாராம்.

கூடுதல் செலவு

கூடுதல் செலவு

மார்க்கெட் நிலவரம் சரியில்லாத நடிகை சம்பளத்தை உயர்த்தி கேட்டுள்ளார். அவரின் பேக்கிரவுண்ட் பெரிது என்பதால் தயாரிப்பாளரும் அவர் கேட்ட தொகையை கொடுத்திருக்கிறாராம். பெரிய தொகையை வாங்கியதோடு மட்டும் அல்லாமல் தனக்கு மேக்கப் போட யார், எங்கிருந்து வர வேண்டும் என்பதையும் அம்மணி தான் தீர்மானிக்கிறாராம். அந்த செலவும் தயாரிப்பாளர் தலையில் விழுந்துள்ளதாம். தெரியாமல் இந்த பெண்ணை புக் செய்துவிட்டேனே, எல்லாம் என் தலையெழுத்து என்கிறாராம் தயாரிப்பாளர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X