அவளுக்கு மட்டும் ஒரு சட்டம் எனக்கு ஒரு சட்டமா? சூப்பர் ஹீரோயினுடன் மோதும் '3' ஹீரோயின்.. என்ன ஆச்சு?

சென்னை: கோலிவுட்டின் முன்னணி நடிகைகள் இருவருக்கு இடையில் ஏற்பட்டு இருக்கும் சண்டை திரையுலகை பெரிய பரபரப்பிற்கு உள்ளாக்கி உள்ளது.

கோலிவுட்டில் அந்த இரண்டு நடிகைகள்தான் தற்போது முன்னணியில் இருப்பவர்கள். ஒருவர் சூப்பர் நடிகை, இன்னொருவர் 3 நடிகை. கடந்த 10 வருடங்களாக இவர்கள் கோலிவுட்டில் பல்வேறு பாத்திரங்களில் நடித்து வருகிறார்கள்.

ஜோதிகா, சிம்ரன் காலம் முடிந்த போதுதான் இவர்கள் அறிமுகம் ஆனார்கள். அதன்பின் கோலிவுட்டின் மிக முக்கியமான நடிகைகளாக இவர்கள் மாறினார்கள்.

வெளியே நண்பர்கள்

வெளியே நண்பர்கள்

வெளியே இவர்கள் தங்களை நண்பர்களாக காட்டிக்கொள்கிறார்கள். வெளியே நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டால், இவர்கள் மிகவும் நெருக்கமானவர்கள் போல காட்டிக் கொள்கிறார்கள். ஆனால் உள்ளுக்குள் இவர்களுக்கு இடையில் நிறைய பிரச்சனை இருக்கிறது.

பிரச்சனை என்ன

பிரச்சனை என்ன

இவர்களில் சூப்பர் நடிகை பயன்படுத்திய அதே பட்டை பெயரை 3 நடிகையும் பயன்படுத்தியதால் முதலில் இவர்களுக்கு இடையில் பிரச்சனை வந்தது. அதன்பின் ஒருவர் சோலோ ஹீரோயின் படத்தில் நடிக்கிறார் என்று இன்னொருவரும் சோலோ ஹீரோயின் படத்தில் நடித்தது பிரச்சனையை பெரிதாக்கியது. தற்போது இந்த பிரச்சனை இன்னும் பெரிதாகி உள்ளது.

சிக்கலுக்கு காரணம்

சிக்கலுக்கு காரணம்

இதில் சூப்பர் நடிகை பெரும்பாலும் பட புரொமோஷன்களில் எதிலும் கலந்து கொள்ள மாட்டார். பெரிய ஹீரோக்களின் படம் என்றாலும் கூட அதன் புரொமோஷன்களில் இவர் கலந்து கொள்வது கிடையாது. இதனால் அவருக்கு பெரிய அளவில் எந்த பிரச்சனையும் ஏற்பட்டதும் இல்லை.

ஆனால் திடீர் என்று

ஆனால் திடீர் என்று

இவர் பார்த்தா 3 நடிகை அதேபோல், தானும் பட புரொமோஷன்களில் கலந்து கொள்வதை தவிர்த்தார். கடைசியாக நடித்த இரண்டு படங்களிலும் அவர் புரொமோஷன் பணிகளில் கலந்து கொள்ளவில்லை. ஆனால் இவருக்கு தயாரிப்பளார்கள் எதிர்ப்பு தெரிவிக்க தொடங்கி உள்ளனர்.

தடை செய்வோம்

தடை செய்வோம்

நீங்கள் புரொமோஷன்களுக்கு வரவில்லை என்றால், உங்களுக்கு நாங்கள் தடை விதிக்க வேண்டி இருக்கும் என்று எச்சரித்துள்ளனர். இதனால் அந்த 3 நடிகை செம கோபத்தில் இருக்கிறாராம். அந்த சூப்பர் நடிகை மட்டும், புரொமோஷனுக்கு வருவதில்லை.

செம கோபம்

செம கோபம்

அவரை யாரும் கண்டிப்பது இல்லை. ஆனால் என்னை மட்டும் கண்டிக்கிறார்கள். எனக்கு மட்டும் தனி சட்டம் போடுகிறார்கள் என்று கோபம் அடைந்துள்ளார். இதனால் இரண்டு நடிகைகளுக்கும் இடையில் விரைவில் பெரிய அளவில் சண்டை வர வாய்ப்புள்ளது என்கிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X