சாதியை காரணம் காட்டி கழட்டி விட்ட பெரும் புள்ளி.. மீண்டும் லாக்கான நடிகை!

By Staff

சென்னை: தற்போது அரசியல் பெரும் புள்ளி ஒருவரின் கட்டுப்பாட்டில் இருக்கும் அந்த நடிகைக்கு, திருமணத்திற்கு முன்பே பல உதவிகளை செய்த அந்த அரசியல் பிரபலம், சாதியை காரணம் காட்டி அவரை கழட்டி விட்டதாகவும், அதன் பின் தான் அந்த நடிகை வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இரண்டு எழுத்து நடிகையின் அம்மா தமிழ் மற்றும் மலையாளப்படத்தில் கவர்ச்சி நடிகையாக இருந்தார். இவரின் தங்கையும் ஒரு கவர்ச்சி நடிகை தான் அந்த காலத்திலேயே படு கிளாமராக நடித்த நடிகை ஆவார். இவர் நடித்த ஒரு படம் மிகவும் ஆபாசமாக இருந்ததால், எப்படி தணிக்கைக்குழு இந்த படத்தை அனுமதித்தது என்று போராட்டம் நடத்தும் அளவிற்கு படு கிளாமராக நடித்திருந்தார்.

two letter actress under the control of a political leader

இரண்டு எழுத்து நடிகை: இப்படிப்பட்ட குடும்ப பின்னணியில் இருந்து வந்தவர் தான் அந்த ரெண்டு எழுத்து நடிகை. இவர் அந்த அழகான நடிகரின் தகுதியை பற்றி பேசி சர்ச்சையில் சிக்கினார். இந்த இரண்டு எழுத்து நடிகை பண ஆதாயத்திற்காக சினிமாவிற்கு வந்த காலத்தில் இருந்தே பல நடிகர்களுடன் அட்ஜெஸ்ட்மெண்ட் செய்துள்ளார். இயக்குநர், தயாரிப்பாளர் என பலரிடமும் ஒத்துப்போன இந்த நடிகை, ஒரு கட்டத்தில் படவாய்ப்பு குறைந்ததும். நகைச்சுவை நடிகருடன் பண்ணை வீட்டிற்கு சென்று அவரை திருப்திப்படுத்தினார்.

நடன இயக்குநருடன் காதல்: அதன் பின் நடன இயக்குநர், ஹீரோவாக நடித்த படத்தில், அவருக்கு ஜோடியாக நடித்தார் அந்த இரண்டு எழுத்து நடிகை. படப்பிடிப்பு நடந்து கொண்டு இருக்கும் போதே, இருவரும் காதலித்ததாக கூறப்படுகிறது. இதற்காக அந்த படத்தில் அளவிற்கு அதிகமாக கவர்ச்சி காட்டி நடித்திருந்தார். ஆனால், அந்த நடன இயக்குநருக்கு ஏற்கனவே திருமணமாகி விட்டதால், அம்மாவும், சித்தியும் சேர்ந்து கொண்டு காதலுக்கு முட்டுக்கட்டை போட்டனர்.

மல்லுவுட் நடிகர்: அதன், சினிமாவிற்கு கொஞ்சமும் சம்மந்தம் இல்லாத ஒருவரை திருமணம் செய்து வைத்தனர். திருமணத்திற்கு பிறகு குழந்தை பெற்றுக்கொண்டு சினிமாவை விட்டு விலகி இருந்த அந்த இரண்டு எழுத்து நடிகை. விட்டக்குறை தொட்டக்குறையாக மல்லுவுட்டில் பிரபல நடிகருடன் நடித்து ரீ என்ட்ரி கொடுத்து மீண்டும் தன்வேலையை காட்டி வருகிறார். தற்போது, அரசியல் பெரும் புள்ளி ஒருவரின் கட்டுப்பாட்டில் இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த அரசியல் புள்ளியை இரண்டு எழுத்து நடிகைக்கும் திருமணத்திற்கு முன்பு இருந்தே நட்பு இருந்துள்ளது.

சாதி தான் காரணமா: நிலம் தொடர்பான பஞ்சாயத்து ஒன்றில் இரண்டு எழுத்து நடிகைக்கு, அந்த அரசியல் புள்ளி உதவி செய்ததால், நட்பு காதலாக மாறி உள்ளது. ஆனால், அந்த அரசியல் புள்ளியோ, சாதியை வைத்துத்தான் தனக்கு கட்சியில் செல்வாக்கு என்றும், வேறுசாதி நடிகையான உன்னை திருமணம் செய்து கொண்டால், அரசியலில் பெயர் கெட்டுவிடும் என்று சொல்ல, அவரின் சம்மதத்துடன் இரண்டு எழுத்து நடிகை வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டார். தற்போது நடிகையின் கணவர் இறந்துவிட்டதால் மீண்டும் இவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்டுள்ளதாகவும், தற்போது அந்த அரசியல் புள்ளியின் கட்டுப்பாட்டில் தான் அந்த இரண்டு எழுத்து நடிகை இருப்பதாக கோடம்பாக்கம் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X