இளம் மாஸ் ஹீரோவுக்கு கொடுப்பதை விட ஜாஸ்தியா கொடுங்க.. திடீரென அடம்பிடிக்கும் 2 போட்டி நடிகர்கள்!
சென்னை: சினிமாவில் அடியெடுத்து வைத்ததில் இருந்து சரியான ரூட்டில் கடகடவென பயணித்து இளம் மாஸ் ஹீரோவாகவே கோலிவுட்டில் மாறிவிட்டார் அந்த நடிகர்.
அவருக்கு முன்பாக பல ஆண்டுகளாக இங்கே போட்டி நடிகர்களாக இருந்து வரும் இருவரின் சம்பளம் ரொம்பவே குறைவாக இருந்து வந்தது.
இந்நிலையில், அதிரடியாக சில படங்களை ஹிட் ஆக்கிய உடனே சம்பளத்தை ராக்கெட் வேகத்தில் உயர்த்தி விட்டார்களாம்.

அதிக சம்பளம்
நல்ல படங்களில் நடிக்கிறோம் என்பதெல்லாம் இப்போதைக்கு நடிகர்களுக்கு முக்கியமே இல்லை. யார் எந்தளவுக்கு சம்பளம் வாங்குகிறோம் என்பதில் தான் பலரும் ஆர்வம் காட்டுகின்றனர். தான் சம்பாதிக்க வேண்டும் என சில பெரிய தயாரிப்பு நிறுவனங்களும் இஷ்டத்துக்கு நடிகர்கள் கேட்கும் சம்பளத்தை வாரி வழங்கி மார்க்கெட்டை உயர்த்தி விடுகின்றன.

குப்பை படங்கள்
நடிகர்களின் சம்பளத்துக்கே பல கோடிகள் செலவாகி விடும் நிலையில், சில கோடிகளை வைத்து இயக்குநர் பட்ஜெட் போட்டு படம் எடுத்தால் நல்ல காட்சிகளாக திரையில் விரியாமல் டல் அடித்து குப்பை படங்களாக மாறி விடுகின்றன. அதன் விளைவு தான் தொடர்ந்து பெரிய நடிகர்களின் படங்கள் எல்லாம் விமர்சன ரீதியாக படுதோல்வியை சந்தித்து வருகின்றன.

ஹிட்டுனு கிளப்பிவிட்டு
பெரியளவில் ரசிகர்களை கவராத படங்களையும் ஹிட்டுன்னு கிளப்பிவிட்டு நடிகர்கள் பெரிய மார்க்கெட் டிராமாவே நடித்து வருகின்றனர் என்கிற குற்றச்சாட்டுக்களும் கிளம்பி வருகின்றன. பரிசு கொடுப்பது, படம் ஹிட்டுன்னு சக்சஸ் பார்ட்டி வைப்பது என பில்டப் செய்து நடிகர்களின் சம்பளத்தை இஷ்டத்துக்கு உயர்த்தி வருகிறார்களாம்.

தொழில் செய்யணுமே
நஷ்டம் அடைந்தாலும், அடுத்து அந்த நடிகர்களை வைத்து தொழில் செய்யணுமே என சில தயாரிப்பாளர்களும் நடிகர் இழுத்த இழுப்புக்கே சென்று வருவதாகவும் பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. ஆனாலும், உள்ளுக்குள் காசு போட்டு ஏமாந்தவன் கடுப்பாகத்தானே செய்வான். அப்படி அவர்கள் புலம்புவது லேசாக புகையத் தொடங்கி உள்ளன.

சம்பளத்தை ஏத்த போட்டி
நேத்து வந்த இளம் மாஸ் நடிகர் அவ்வளவு சம்பளம் வாங்குறாரு, எங்களுக்கு கொடுக்க மாட்டீங்களா என புதிதாக கதையை தூக்கிக் கொண்டு செல்லும் தயாரிப்பாளர்கள் கையில காசு வாயில தோசை என இரு போட்டி நடிகர்களும் போட்டா போட்டி போட்டுக் கொண்டு சம்பளத்தை ஏற்றி உள்ளதாக பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.

டென்ஷனில் தயாரிப்பாளர்கள்
பெரிய நடிகர்கள் தான் 100 கோடி கேட்கிறாங்கன்னு அவர்களை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கே தத்து கொடுத்து விட்ட நிலையில், நல்ல நடிகர்கள் என இவர்களை நம்பி போனால், இவர்களும் அதிக சம்பளம் கேட்டால் நாங்க எல்லாம் எப்படி பிழைக்கிறது என சில தயாரிப்பாளர்கள் கடும் டென்ஷனாகி விட்டதாக கோடம்பாக்கத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.


Click it and Unblock the Notifications











