மாஸ் நடிகருடன் ஜோடி சேர மல்லுக்கட்டும் இரு நடிகைகள்.. சான்ஸ் கிடைக்கப் போவது யாருக்கு?

By Staff

சென்னை: டோலிவுட்டில் கொடி கட்டிப் பறக்கும் அந்த இரு நடிகைகளும் கோலிவுட்டின் பாக்ஸ் ஆபிஸ் கிங் மாஸ் நடிகருடன் எப்படியாவது மீண்டும் ஜோடி சேர்ந்து நடித்து விட வேண்டும் என பெருமுயற்சி எடுத்து வருகிறார்களாம்.

பைலிங்குவல் படமாக உருவாகவுள்ள அந்த படத்தின் வாய்ப்பையே ஏற்படுத்திக் கொடுத்த விருது நடிகை அந்த படத்தில் எப்படியாவது ஜோடி சேர்ந்து விடலாம் என திட்டம் தீட்டிய நிலையில், அந்த படத்தில் அவர் ஜோடி இல்லை என்கிற பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.

இந்நிலையில், மாஸ் நடிகரின் அடுத்த படத்திலாவது கர்ச்சிப்பை போட்டு விட வேண்டும் என விருது நடிகை போராட அவருக்கு சரியான போட்டியாக சமத்து நடிகையும் களத்தில் குதித்திருக்கிறாராம்.

கமர்ஷியல் கிங்

கமர்ஷியல் கிங்

கோலிவுட்டின் கமர்ஷியல் கிங்காக மாஸ் நடிகர் தொடர்ந்து கொடி கட்டி பறக்கிறார். விரைவில் வெளியாக காத்திருக்கும் அவரது படத்தின் மீது தான் தற்போது ஒட்டுமொத்த தமிழ் சினிமாவும் எதிர்பார்ப்பை வைத்திருக்கிறது. இந்த முறையும் மிஸ் ஆகாமல் வசூல் வேட்டை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

போட்டி போடும் நடிகைகள்

போட்டி போடும் நடிகைகள்

மாஸ் நடிகரின் அடுத்த படத்தில் எப்படியாவது அவருடன் ஜோடி சேர்ந்து நடித்து விட வேண்டும் என தென்னிந்திய நடிகைகளுக்கு மத்தியில் மிகப்பெரிய போட்டியே நடைபெற்று வருகிறது. அதிலும், குறிப்பாக அவார்டு நடிகைக்கும் சமத்து நடிகைக்கும் இடையே தான் சரியான போட்டி நிலவி வருகிறதாம்.

மிஸ் ஆன வாய்ப்பு

மிஸ் ஆன வாய்ப்பு

ஏற்கனவே இரு முறை மாஸ் நடிகருடன் ஜோடி போட்டு நடித்துள்ள அவார்டு நடிகை மீண்டும் ஒருமுறை அவருடன் இணைந்து நடித்து விட வேண்டும் என ஏகப்பட்ட முயற்சிகளை மேற்கொண்டு வருகிறாராம். பைலிங்குவல் படத்துக்கு அஸ்திவாரம் போட்டதே இந்த நடிகை தான் என கூறப்பட்டு வந்த நிலையில், அந்த படத்தில் நடிக்கும் வாய்ப்பு அந்த நடிகைக்கு கிடைக்காமல் போக நடிகை ரொம்பவே அப்செட் ஆகி உள்ளார்.

அடுத்த படத்தில்

அடுத்த படத்தில்

எப்படியாவது அந்த நடிகரின் அடுத்த படத்தில் நாம தான் ஜோடியாக நடிக்க வேண்டும் என விடாப்பிடியாக பல முயற்சிகளை செய்து வந்த நடிகைக்கு தற்போது புதிதாக ஒரு சிக்கல் உருவாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதனால், அவார்டு நடிகை அழுவாத குறையாக அப்செட் ஆகித்தான் இன்னொரு படத்தில் நடிக்கவே ஓகே சொல்லி உள்ளாராம்.

சந்தில் சிந்துபாடிய சமத்து நடிகை

சந்தில் சிந்துபாடிய சமத்து நடிகை

சர்வதேச அளவில் புகழடைந்துள்ள சமத்து நடிகை மாஸ் நடிகரின் அடுத்த படத்தில் ஜோடியாக பண்ண முயற்சிக்கு கை மேல் பலன் கிடைத்திருக்கிறதாம். ஆரம்பத்தில் ஒரே ஒரு பாட்டுக்கு நடனமாடுவதாக பேசிய அவருக்கு ஹீரோயின் வாய்ப்பே கிடைக்கும் சூழல் உருவாகி இருப்பது விருது நடிகையை ரொம்பவே அப்செட் ஆக்கி இருக்கிறதாம்.

இன்னொரு நடிகையும்

இன்னொரு நடிகையும்

விருது நடிகை, சமத்து நடிகை இருவரை தாண்டி அந்த கிரஷ் நடிகையும் எப்படியாவது மாஸ் நடிகர் படத்தில் நடித்தே தீர வேண்டும் என்கிற முயற்சியை தொடர்ந்து செய்து வருவதால், இறுதியாக அந்த ஜாக்பாட் வாய்ப்பு யாருக்கு கிடைக்கப் போகுது என்பதை கவனமாக உற்றுநோக்கி வருகிறது சினிமா வட்டாரம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X