»   »  நம்ம மார்க்கெட் பாதிக்கப்படுமோ: 2 ஹீரோயின்களை பார்த்து டென்ஷனில் பெரிய நம்பர் நடிகை

நம்ம மார்க்கெட் பாதிக்கப்படுமோ: 2 ஹீரோயின்களை பார்த்து டென்ஷனில் பெரிய நம்பர் நடிகை

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பெரிய நம்பர் நடிகை கோலிவுட்டுக்கு புதிதாக வந்துள்ள இரண்டு காதல் நடிகைகளை பார்த்து லைட்டாக டென்ஷனாகியுள்ளாராம்.

பெரிய நம்பர் நடிகை சினிமாவுக்கு ஒரு குட்டி பிரேக் விட்டு மீண்டும் வந்ததில் இருந்து அவரது கெரியர் உச்சத்தில் உள்ளது. இளம் நடிகர்களோ டைரக்டர் சார் எங்கள் ஹீரோயினாக பெரிய நம்பர் நடிகையை போடுங்கள் என்று வாய் விட்டு கேட்கிறார்கள்.

Two young actress's entry worries senior actress of Kollywood

இளசுகளின் மனம் கவர்ந்த நாயகியாக உள்ள அவரின் மவுசும் சரி, சம்பளமும் சரி உச்சத்தில் உள்ளது. கோலிவுட்டுக்கு இதுவரை எத்தனையோ நடிகைகள் புதிதாக வந்தும் அவர்களை கண்டு எங்கே நம்ம மார்க்கெட் பாதிக்குமோ என பெரிய நம்பர் நடிகை பயந்தது இல்லை.

இந்நிலையில் காதலின் மறுபெயர் கொண்ட படத்தின் இரண்டு இளம் ஹீரோயின்களின் வரவால் தனது மார்க்கெட் ஆட்டம் கண்டுவிடுமோ என பெரிய நம்பர் நடிகை பதட்டமாக உள்ளாராம்.

யாரையும் கண்டு டென்ஷனாகாத நம்பர் நடிகை முதல் முறையாக 2 நடிகைகளை பார்த்து கவலையில் உள்ளார்.

English summary
Senior actress is reportedly scared of two heroines who have recently entered Kollywood.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil