»   »  வதந்தீயில் தீநகர் நாயகி!

வதந்தீயில் தீநகர் நாயகி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

தீநகர் உதயாதாரா வதந்தி வலையில் சிக்கி கோலிவுட்டில் அரைபடத் தொடங்கியுள்ளார்.

கோலிவுட்டில் வதந்திகளுக்குப் பஞ்சமில்லை. அவர் இவரோடு போனார், இவர் அவரோடு போகிறார் என்று எவர் எவரோடு எப்படி இருக்கிறார்கள் என்பதை கதை கதையாக சொல்ல ஒரு கும்பலே இருக்கிறது.

இந்த நிலையில் லேட்டஸ்ட் வதந்தி வலையில் சிக்கியுள்ளார் உதயதாரா. கேரளத்து வரவான உதயதாரா, நயனதாரா ரேஞ்சுக்கு உயர வேண்டும் என்பதற்காகவே தனது பெயருடன் தாராவை சேர்த்து விட்டார்.

கண்ணும் கண்ணும் படம்தான் உதயதாராவுக்கு முதல் படம். முதல் படத்திலேயே கவனிப்புக்குள்ளான உதயதாரா அடுத்து புக் ஆன படம்தான் தீநகர்.

இப் படத்தில் கரணுடன் இணைந்து நடித்து வருகிறார் உதயதாரா. படத்தில் ஆரம்பத்தில் சில காட்சிகளில் மட்டுமே வருவதாக இருந்தார் உதயதாரா. கரணுக்கே அதிக முக்கியத்துவம் கொடுத்துக் காட்சிகள் இருந்தன.

ஆனால் சமீபத்தில் உதயதாராவுக்கும் காட்சிகள் கூடுதலாக்கப்பட்டதாம். அதுதவிர கூடுதலாக பாடல்களும் சேர்க்கப்பட்டனவாம். என்னடா பின்னணி என்று பார்த்தால், படத்தின் இயக்குநர் திருமலையின் கைங்கர்யாத்தால்தான் உதயதாராவுக்கு ஏற்றம் கிடைத்துள்ளது தெரிய வந்தது.

அதாகப்பட்டது, உதயதாராவும், திருமலையும் நெருங்கிப் பழகுகிறார்களாம். நெருக்கம் என்றால் அப்படி ஒரு நெருக்கமாம். இருவரும் இணைந்துதான் படப்பிடிப்புத் தளத்திலிருந்து கிளம்புகிறார்களாம். சேர்ந்துதான் ஷூட்டிங்குக்கு வருகிறார்களாம்.

பல இடங்களிலும் இருவரையும் சேர்த்து வைத்துப் பார்க்க முடிகிறதாம். இருவரும் சர்ச்சுக்கும் அடிக்கடி சேர்ந்தே போகிறார்களாம்.

என்னடா இது புதுக் கதையாக இருக்கிறதே என்று கோலிவுட் கண்கள் இவர்கள் பக்கம் இப்போது திரும்பியுள்ளது. எந்த நேரத்திலும் எக்குத்தப்பான செய்திகள் வரலாம் என்ற எதிர்பார்ப்பே இந்த அலாதி ஆர்வத்திற்குக் காரணம்.

இது கடலையா இல்லை, காதலா?

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil