»   »  'ஒல்லி தான் வேணும்' அடம்பிடிக்கும் சங்கத் தலைவர்

'ஒல்லி தான் வேணும்' அடம்பிடிக்கும் சங்கத் தலைவர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜெயமான இயக்குனர் படத்தில் நடிக்கும் சங்கத் தலைவர், இந்தப் படத்திற்கும் ஒல்லி தான் இசையமைக்க வேண்டும் என்று வற்புறுத்துகிறாராம்.

நீண்ட இழுபறிக்குப் பின் வெளியான கடவுள் படம் நடிகரைக் காப்பாற்றி விட்டது. இதனால் ஜெயமான இயக்குநர் தன்னுடைய அடுத்த படத்தில் ஹீரோவாக சங்கத் தலைவரை ஒப்பந்தம் செய்திருக்கிறார்.

இந்நிலையில் தமிழனான இசையமைப்பாளரை இயக்குநர் ஒப்பந்தம் செய்யலாம் என்று கூற, சங்கத் தலைவர் தமிழன் வேண்டாம் ஒல்லி தான் இசையமைக்க வேண்டும் என்று கூறுகிறாராம்.

நாயகனாக தான் அறிமுகமான காலத்தில் தன்னைத் தூக்கி விட்டது ஒல்லியின் இசைதான் என்பது சங்கத் தலைவரின் எண்ணமாக இருக்கிறது.

இதனால் தான் தொடர்ந்து தனது படங்களில் ஒல்லிக்கு வாய்ப்பு தந்து வருகிறார். ஆனால் தனது முந்தைய ஹிட்டுக்கு தமிழனின் இசையும் ஒரு முக்கிய காரணம் என்பது இயக்குனரின் எண்ணமாக உள்ளது.

இதனால் இசையமைப்பாளர் விவகாரத்தில் இயக்குநர் மற்றும் நாயகனுக்கிடையே லேசான உரசல்கள் எழுந்திருப்பதாக கூறுகின்றனர்.

இப்படத்தை சங்கத் தலைவர் சொந்த செலவில் தயாரிப்பதால், ஒல்லி இசையமைப்பாளருக்கு வாய்ப்புகள் அதிகம் இருப்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Union Leader next movie he Wants Thin Music Composer but The Director want Another Music Composer. Now this Issue Create Clash between the Director and Union Leader.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil