படத்தை ரிலீஸ் பண்ணணுமே... வருவாரா மாட்டாரா? மவுசு கூடிய காமெடியனுக்கு காத்திருக்கும் தயாரிப்பாளர்கள்
சென்னை: அந்த காமெடி நடிகருக்காக, சுமார் பத்து சிறுபட்ஜெட் படங்கள் திரைக்கு வராமல் காத்திருப்பதாகச் சொல்கிறார்கள்.
தமிழ் சினிமாவில் இப்போது நிற்க நேரமில்லாமல் ஓடிக்கொண்டிருப்பவர் அந்த காமெடி நடிகர்.
யோகமான அந்த காமெடி நடிகருக்கு திடீர் மவுசு, திக்குத்தெரியாமல் சென்றுகொண்டிருப் பதால், நித்தமும் கால்ஷீட் கேட்டு ஏராளமானோர் படையெடுக்கிறார்கள்.

பிசியோ பிசி
பெரிய படங்களில் இருந்து சின்ன படங்கள் வரை, சார் பிசியோ பிசி. உச்ச நடிகர் கூட இவர் கால்ஷீட்டுக்காகக் காத்திருந்து ஷூட்டிங்கில் கலந்துகொண்டார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

ஹீரோ ஆக்கவும்
இந்நிலையில், அவரை ஹீரோவாக வைத்து படமெடுக்கவும் சில தயாரிப்பாளர்கள் முயன்று வருகிறார்கள். இதற்கிடையே, இவர் நடித்துள்ள சில சிறு பட்ஜெட் படங்கள், திக்கித் திணறி இப்போது ரிலீஸுக்கு ரெடியாகி வருகிறதாம்.

அங்க இருக்கார்
அதற்கு டப்பிங் பேச காமெடியை அழைத்தால், பிசி என்றே பதில் வருகிறதாம். சார், அங்க ஷூட்டிங்ல இருக்கார், இங்க ஷூட்டிங்ல இருக்காரு, இன்னைக்கு முடியாது, நாளைக்கு முடியாது என்று இழுத்துக்கொண்டே போகிறார்களாம்.

எல்லாம் நேரம்
போராடி படத்தை ரிலீஸ் செய்துவிடலாம் என்று நினைக்கும் அந்த சிறு படத்தயாரிப்பாளர்கள், இவருக்காகக் காத்திருந்து, இதை எங்க போய் சொல்ல? என்கிறார்கள், வெறுப்பாக. காமெடியின் டப்பிங்கிற்காக சுமார் 10 படங்கள் வரை வெயிட்டிங்கில் இருப்பதாக சொல்கிறார்கள், கோலிவுட்டில்.
இதுதான் சினிமா.


Click it and Unblock the Notifications











