அப்போ கெத்து காட்டிட்டு.. இப்போ சான்ஸ் கேட்கும் வி நடிகர்!
Recommended Video
சென்னை: பிரம்மாண்ட படத்தில் நடிக்க வாய்ப்பு தேடி வந்த போது வேண்டாமென உதறிய அந்த வி நடிகர், இப்போ இன்னொரு வாய்ப்பு கொடுங்களேன்னு கேட்கிறாராம்.
சமீபத்தில் வெளிவந்த அந்த வி நடிகரின் படங்கள் எல்லாமே படு தோல்வியை சந்தித்த நிலையில், இனிமே கெத்து காட்டுவது வீண் என இறங்கி வந்துள்ளாராம்.
தனது ஹீரோ மார்க்கெட் சரிந்து வருவதை புரிந்து கொண்ட நிலையில், வி நடிகர் தற்போது கொஞ்சம் அடக்கி வாசிக்கத் தொடங்கி உள்ளாராம்.

டபுள் டார்ச்சர்
சமீபத்தில் வெளியான அந்த வி நடிகரின் டபுள் ஆக்ஷன் படம், ரசிகர்களுக்கு டபுள் டார்ச்சர் கொடுத்து வருகிறதாம். அந்த பெரிய பண்டிகை நாளுக்கு நல்ல வேளை இந்த படம் வெளியாகவில்லை என்றும், வெளியாகியிருந்தால், படு தோல்வியை சந்தித்திருக்கும் என்றும், தற்போது பெரிய போட்டி இல்லாததால், சுமாராக ஓடி வருவதாக பாக்ஸ் ஆஃபிஸ் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

சரியும் ஹீரோ மார்க்கெட்
துணை நடிகராக இருந்து, தனது விடா முயற்சியால் சரசரவென வளர்ந்து வந்த அந்த வி நடிகர், நடுவில் நண்பர்களுக்காக படம் பண்ணுகிறேன், வாய்ப்பு தருகிறேன் என்ற பெயரில், சில பல மொக்கை படங்களில் நடித்து தனது ஹீரோ மார்க்கெட்டை மொத்தமாக சரிய விட்டுள்ளாராம். பெரிய இயக்குநர்கள் அந்த வி நடிகரை இப்போதெல்லாம் ஹீரோவாக பார்ப்பதில்லையாம்.

அப்போ ரிஜெக்ட்
பிரம்மாண்ட படத்தில் நடிக்க வந்த வாய்ப்பையும், மணியான இயக்குநரின் வரலாற்று படத்தில் நடிக்க வந்த வாய்ப்பையும், கெத்து காட்டி வேண்டாம் என அப்போது ரிஜெக்ட் செய்திருந்தார் அந்த வி நடிகர். அவருக்கு வந்த முத்தான வாய்ப்புகள், தற்போது வேறு நடிகர்களுக்கு சென்று விட்டது.

இப்போ ரெக்வஸ்ட்
அப்போ கெத்து காட்டி ரிஜெக்ட் செய்த அந்த நடிகர், இப்போது தானே முன்வந்து ரெக்வஸ்ட் செய்யும் நிலைக்கு மாறி விட்டாராம். சமீபத்தில் நடந்த அந்த திரைத்துறை ஜாம்பவானின் விழாவில், நேரடியாக அவரிடம் சென்று, பழசை மறந்துடுங்க, அடுத்த படத்தில் ஏதாவது வாய்ப்பிருந்தா கொடுங்க எனக் கேட்டுள்ளாராம். தற்போது வி நடிகருக்கு இருக்கும் ஒரே நம்பிக்கை அந்த மாஸ் நடிகரின் அடுத்த படம் தானாம்.


Click it and Unblock the Notifications











