அந்த படத்தையே ரிலீஸ் செய்திருக்கலாம் போல.. புலம்பும் வாரிசு நடிகர்

சென்னை: பிற மொழிகளில் பல நூறு கோடிகளை அள்ளிய அந்த ரீமேக் படத்தில் தான் இங்கே அறிமுகமாவேன் என அந்த வாரிசு நடிகர் அடம்பிடித்து நடித்தார்.

ஆனால், அப்பாவுக்கு வெற்றி கொடுத்த இயக்குநர் சுட்ட தோசை கருகி போனது என மறுபடி ஒரு மொருகலான தோசையை சுட அந்த வாரிசு நடிகர் துடியாய் துடித்தார்.

முதல் படம் போனால், பரவாயில்லை அடுத்த படத்தில் பார்த்துக் கொள்ளலாம் என அப்பா நடிகர் சொல்லியும், ஆசைப்பட்டா மட்டும் போதாது அடம் பிடிக்கணும் என சினிமா வசனங்களை பார்த்துக் கெட்டுப் போன, அந்த வாரிசு நடிகரின் அடம் தாங்காமல் புதுசா சுட்ட அந்த தோசையும் புளித்த தோசையாக போயுள்ளது.

பாக்ஸ் ஆஃபிஸ்

பாக்ஸ் ஆஃபிஸ்

பிற மொழிகளில் ரீமேக் செய்யப்பட்ட அந்த படம் பல நூறு கோடிகளை குவித்து பாக்ஸ் ஆஃபிஸில் மிகப்பெரிய வசூல் வேட்டையை நடத்தி வெற்றி படைத்தது. ஆனால், தமிழில் அந்த படம் ஒரு வாரம் மட்டுமே ஓட்டப்பட்டது.

எக்கச்சக்க விளம்பரம்

எக்கச்சக்க விளம்பரம்

மகனை ஹீரோவாக்க அப்பா நடிகர் எக்கச்சக்க விளம்பரங்கள் செய்ததால், படத்திற்கு நல்ல ஓபனிங் கிடைத்தது. ஆனால், மற்ற மொழிகளில் கிடைத்த பிளாக்பஸ்டர் ஹிட் கிடைக்காததால், வாரிசு நடிகர் புலம்பி வருகிறார்.

ஒரு வாரம் கூட ஓடல

ஒரு வாரம் கூட ஓடல

வாரிசு நடிகர் நடிப்பை ஆஹா ஓஹோன்னு பலரும் பாராட்டி வந்தனர். ஆனால், அவை அனைத்துமே விளம்பரம் செய்த மேஜிக் தான் என்றும், படம் ஒரு வாரத்தை தாண்டி கூட அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடவில்லை என்றும் அதற்கடுத்து வந்த ரிப்போர்ட்டுகள் தெரிவித்துள்ளன.

பயங்கர நஷ்டம்

பயங்கர நஷ்டம்

அந்த பிரபல இயக்குநர் படத்தை ஓரங்கட்டி விட்டு புது படத்தை இயக்கிய தயாரிப்பு நிறுவனத்துக்கு, இந்த படமும் லாபம் கொடுக்காததால், பயங்கர நஷ்டம் ஏற்பட்டுள்ளதாம். இதனால், அந்த பழைய படத்தையும் தூசு தட்டி, ஆன்லைனில் வியாபாரம் செய்ய தயாரிப்பு தரப்பு முயன்று வருகிறது.

அதையே ரிலீஸ் பண்ணியிருக்கலாம்

அதையே ரிலீஸ் பண்ணியிருக்கலாம்

இத்தனை கோடிகள் நஷ்டமாகும் என்பது தனக்கு முன்பே தெரியாது என்றும், அந்த படத்தையே ஒழுங்கா ரிலீஸ் பண்ணியிருக்கலாம் பெயராவது கிடைத்திருக்கும் என வாரிசு நடிகர் தற்போது புலம்பி வருகிறாராம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X